/* */

மாமிசம் மீன் கழிவுகளால் தொற்று நோய் அபாயம்: வாகனங்கள் சிறை பிடிப்பு

சோழவரம் அருகே தனியார் கம்பெனிக்கு கொண்டு வரும் மாமிச கழிவுகளால் தொற்று நோய் அபாயம் உள்ளதாகக் கூறி பொதுமக்கள் பொதுமக்கள் வாகனங்களை சிறைப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

மாமிசம் மீன் கழிவுகளால் தொற்று நோய் அபாயம்: வாகனங்கள் சிறை பிடிப்பு
X

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி, சோழவரம் ஒன்றியம், மாபுஸ்கான் பேட்டை கிராமப் பகுதியில்.கோழி தீவனம் தயார் செய்யும் தனியார் கம்பெனி ஒன்று இயங்கி வருகிறது.

இந்த கம்பெனியில் கோழி இறைச்சி கழிவுகள்,மீன் கழிவுகள் உள்ளிட்ட மாமிச கழிவுகளை சென்னை, செங்குன்றம், திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, ஆரம்பாக்கம், திருத்தணி, பள்ளிப்பட்டு, பெரியபாளையம், தாமரைப்பாக்கம், ஆவடி, அம்பத்தூர் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படுகிறது.

பின்னர் இங்கு சேமிக்கப்பட்டு கோழி பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு தீவனம் தயார் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக 50க்கும் மேற்பட்ட வாகனங்களில் கொண்டு வரப்படும் கோழி மற்றும் மீன் இறைச்சி கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதுடன் கம்பெனியில் சேமிக்கப்படும் கழிவுகளால் அருகாமையில் வசிக்கும் பொது மக்களுக்கு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

தீவனம் தயாரிக்கும் போது அதிலிருந்து வெளியேறும் கழிவு காற்றானது சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு பல்வேறு தொற்று நோய்களையும் வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பிரச்சனைகளையும் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இரவில் வெளியேறும் கழிவுகளால் இப்பகுதி மக்கள் நிம்மதியாக தூங்க முடியவில்லை எனவும் கூறி கம்பெனிக்கு வரும் வாகனங்களை அப்பகுதி மக்கள் சிறை பிடித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் பிரச்சினையை குறித்து அதிகாரிகள் இதற்கு நிரந்தர தீர்வு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு பதற்றமும் நிலவியது.

Updated On: 1 Jun 2023 5:39 AM GMT

Related News