/* */

பள்ளி வளாகத்தில் பழுதடைந்த குடிநீர் தொட்டி அகற்ற கோரிக்கை

வேலைகாபுரம் ஊராட்சி தொடக்கப்பள்ளி வளாகத்தில் உள்ள பழுதடைந்த குடிநீர் மேல்நிலைத் தேக்கத்தொட்டி எந்த நேரத்திலும் ஆபத்து விளைவிக்கும் விதத்தில் உள்ளதால் அகற்றி புதிய தொட்டியை கட்டி தர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

பள்ளி வளாகத்தில் பழுதடைந்த குடிநீர் தொட்டி அகற்ற கோரிக்கை
X

பழுதடைந்த மேல்நிலை தேக்கத் தொட்டி.

திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம், வேலைகாபுரம் ஊராட்சியில் சுமார் 3,000 மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.

இப்பள்ளியில் 1. முதல் 5.வகுப்பு வரை வகுப்புகள் உள்ளன இதில் சுமார் கிராமத்தை சார்ந்த 30.க்கு மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் இந்தப் பள்ளி கட்டிடம் வளாகத்தில் 50 ஆயிரம் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலைத் தேக்க தொட்டி ஒன்று அமைந்துள்ளது.

இந்த தொட்டியானது கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும் இதனை அடுத்து இந்த குடிநீர் தொட்டியில் தண்ணீர் சேமித்து அப்பகுதி சேர்ந்த மக்களுக்கு காலை, மாலை என இருவேளைகளில் பைப்பின் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த குடிநீர் தொட்டி ஆனது தற்போது பழுதடைந்து கட்டிடத்தில் பல பகுதிகளில் விரிசல்கள் ஏற்பட்டு தொட்டியின் தூண்கள் மிகவும் பலவீனம் அடைந்து கான்கிரீட்டுகள் பெயர்ந்து அதில் உள்ள கம்பிகள் வெளியே தெரிந்த படி ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இந்தத் தொட்டியை கடந்த 2013 ஆம் ஆண்டு பழுது பார்க்கப்பட்டது.

மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படும் இந்தத் தொட்டியானது எந்த நேரத்தில் சரிந்து முறிந்து கீழே விழும் அபாயமும் உருவாகியுள்ளது. பள்ளிக்கு அருகாமலே இந்த கட்டிடம் உள்ளதால் பகுதியில் குழந்தைகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் எனவே ஆபத்து விளைவிக்கும் முன்பே இந்த தொட்டியை அகற்றி புதிய குடிநீர் மேல்நிலைத் தேக்க தொட்டிய அமைத்து தர வேண்டும் என பள்ளியில் பயிலும் குழந்தைகளின் பெற்றோர்கள் கிராம பொதுமக்கள் கிராம சபை கூட்டத்தில் பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

எனவே ஆபத்து விளைவிக்கும் முன்பே தொட்டியை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

Updated On: 16 Oct 2023 5:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...