/* */

திருவள்ளுர் அருகே வறுமையால் ரூ. 5000 க்கு ஆண் குழந்தையை விற்ற தாயிடம் விசாரணை

திருவள்ளுர் அருகே ஆண் குழந்தையை வறுமையின் காரணமாக விற்ற தாயிடம் சமூக பாதுகாப்பு குழந்தைகள் நலப் பிரிவினர் விசாரணை

HIGHLIGHTS

திருவள்ளுர் அருகே  வறுமையால் ரூ. 5000 க்கு ஆண் குழந்தையை விற்ற  தாயிடம் விசாரணை
X

பைல் படம்

திருவள்ளுர் அருகே பிறந்த 5 நாட்களே ஆன ஆண் குழந்தையை வறுமையின் காரணமாக ரூ..5000 விற்பனை செய்த தாயிடம் சமூக பாதுகாப்பு குழந்தைகள் நலப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் அருகே சத்தரை பகுதியை சேர்ந்தவர் நம்பிராஜன் சந்திரா தம்பதிக்கு கடந்த 5.ம் தேதியன்று ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.ஏற்கெனவே உள்ள இரு குழந்தைகள் பராமரிக்க முடியாமல் குடும்ப வறுமையால் இருந்து வந்ததால் வீட்டுக்கு தெரியாமல் பிறந்த 5 நாட்களே ஆண் குழந்தையை ஸ்ரீபெரும்புதூர் பகுதியைச் சேர்ந்த ஜெயந்தி என்பவருக்கு சந்திரா, ரூபாய்.5 ஆயிரத்துக்கு விற்றுள்ளார்.

இதுதொடர்பாக மப்பேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தவுடன் ஜெயந்தியிடம் இருந்து குழந்தையை மீட்டு சமூக பாதுகாப்பு குழந்தைகள் நலப்பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மேலும் சமூக பாதுகாப்பு குழந்தைகள் நலப் பிரிவு அதிகாரிகள் குழந்தையின் தாய் சந்திராவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், வறுமை காரணமாக பிறந்த ஐந்து நாட்களே ஆன ஆண் குழந்தை விற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Updated On: 11 May 2022 4:00 AM GMT

Related News