/* */

அதிகாரிகளை கண்டித்து கடிதம் எழுதி வைத்து விட்டு, கொடிக்கம்பத்தில் தூக்கிட்டு முதியவர் தற்கொலை..!

Latest Suicide News- குறிப்பிட்ட சமூகத்தினருக்கு சாதி சான்றிதழ் வழங்காமல் அதிகாரிகள் மறுப்பதாக கூறி, கடிதம் எழுதி வைத்து விட்டு, பள்ளிப்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கொடிக்கம்பத்தில் தூக்கிட்டு முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

அதிகாரிகளை கண்டித்து கடிதம் எழுதி வைத்து விட்டு, கொடிக்கம்பத்தில் தூக்கிட்டு முதியவர் தற்கொலை..!
X
திருத்தணி அரசு மருத்துவமனை.

Latest Suicide News- திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் கல்வெட்டு கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கம்பத்தில், பெரியசாமி என்பவர் கொடிக்கம்பத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதியவர் பெரியசாமி, தனது சமூகத்திற்கு சாதி சான்றிதழ் வழங்கவில்லை எனவும், இதனால் 3 ஆயிரம் பேர் அவதி அடைவதாகவும் வருவாய்த்துறை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு தெரிவித்து வந்தார். இந்நிலையில், இதுதொடர்பாக தமது கைப்பட கடிதம் எழுதி வைத்து விட்டு முதியவர் பொது இடத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் அறிந்த காவல்துறையினர் முதியவர் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், இதுகுறித்து தகவல் பரவியதால் அதிர்ச்சியடைந்த இவரது உறவினர்கள், திருத்தணி அரசு மருத்துவமனை வளாகத்தில் குவிந்தனர்.இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது

மேலும், இந்த விவகாரத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலின் உடனடியாக தலையிட்டு சாதி சான்றிதழ் வழங்காமல் அதிகாரிகள் புறக்கணித்து வரும் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என, முதியவர் பெரியசாமியின் உறவினர்கள் மற்று அவரது சமூகதினர் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2






Updated On: 5 July 2022 10:51 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...