திருவள்ளூர் அருகே லாரிகள் மோதிக்கொண்ட விபத்தில் மேஸ்திரி உயிரிழப்பு

திருவள்ளூர் அருகே லாரிகள் மோதிக்கொண்ட விபத்தில் கட்டிட மேஸ்திரி உயிரிழந்தார். அவரது மனைவி, மகன் படுகாயம் அடைந்தனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
திருவள்ளூர் அருகே லாரிகள் மோதிக்கொண்ட விபத்தில் மேஸ்திரி உயிரிழப்பு
X

திருவள்ளூர் அருகே நடந்த சாலை விபத்தில் ஒருவர் பலியானார். காயம் அடைந்த 2 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

திருவள்ளூர் அருகே வீராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (44). இவர் தனது மனைவி மகன் உடன் திருத்தணி அருகே உள்ள தனது சொந்த ஊரான தரணிவராகபுரம் பகுதியில் நடைபெற்ற அம்மன் கோவில் திருவிழாவில் பங்கேற்று பின் ஒரே இருசக்கர வாகனத்தில் ஆவடி நோக்கி வந்து கொண்டிருந்தார்.

திருவள்ளூர்- சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மணல் லாரியும் கொரியர் வாகனமும் மோதிக்கொண்டதில்.பின்னால் வந்த இருசக்கர வாகனம் கொரியர் வாகனத்தின் மீது மோதியதில் கட்டிட மேஸ்திரி சுரேஷ் படுகாயமடைந்து மருத்துவமனைக்கு வரும் வழியில் உயிரிழந்தார்.

அவருடைய மனைவி சுதா (34), அவருடைய மகன் மனோஜ் (15). கவலைக்கிடமான நிலையில் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது போன்ற தொடர் விபத்துக்கள் நடைபெறுவதற்கு முக்கிய காரணம் அப்பகுதியில் அரசு விடப்பட்டுள்ள மணல் குவாரியே காரணமாகும் அதிகமான லாபம் ஈட்டும் முறையில் அதிக அளவில் லாரி உரிமையாளர்கள் அதிவேகமாக லாரிகளை இயக்க சொல்வதால் இத்தகைய கோர விபத்துக்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு வருகிறது. எனவே இது போன்ற விபத்துக்கள் நடைபெறாமல் இருக்க கட்டுப்படுத்த மாவட்ட வட்டார போக்குவரத்து துறை இதில் தலையிட வேண்டும் பொது மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Updated On: 25 May 2023 8:30 AM GMT

Related News

Latest News

 1. தஞ்சாவூர்
  தஞ்சையில் பனை மற்றும் காதி கிராப்ட் பொருட்கள் விற்பனை அங்காடி
 2. தமிழ்நாடு
  அரிசிக்கொம்பனை மூர்க்கமாக்கியது யார்...?
 3. தஞ்சாவூர்
  தஞ்சை மாவட்டத்தில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
 4. தமிழ்நாடு
  விற்பனை வாகன அங்காடி: மாற்றுத்திறனாளிக ளுக்கு மாவட்ட நிர்வாகம்...
 5. உலகம்
  வெறுங்கையை வீசிக்கிட்டு போய் இனி பொருள் வாங்கலாம்
 6. உலகம்
  27 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவில் உலக அழகி போட்டி
 7. இந்தியா
  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மகளுக்கு திருமணம்
 8. தமிழ்நாடு
  புதுக்கோட்டையில் ”சிறுதானிய உணவகம்” அமைக்க ரூ 5 லட்சம் ஒதுக்கீடு
 9. வந்தவாசி
  பேருந்து நிலைய டிரான்ஸ்பார்மரில் திடீரென தீ: பயணிகள் அலறியடித்து...
 10. நாமக்கல்
  நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டில் வருகிற 15ம் தேதி சமரச பேச்சுவார்த்தை...