‘இன்ஸ்டாநியூஸ்’ செய்தி எதிரொலி: ஆரணி பேரூராட்சிக்கு வருகிறது பேருந்து நிலையம்

‘இன்ஸ்டாநியூஸ்’ செய்தி எதிரொலியாக ஆரணி பேரூராட்சிக்கு விரைவில் பஸ்நிலையம் அமைப்பது பற்றி கூடுதல் இயக்குனர் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
‘இன்ஸ்டாநியூஸ்’ செய்தி எதிரொலி: ஆரணி பேரூராட்சிக்கு வருகிறது பேருந்து நிலையம்
X
ஆரணியில் பேருந்து நிலையம் அமைப்பது பற்றி பேரூராட்சிகளின் கூடுதல் இயக்குனர் ஆய்வு செய்தார்.

ஆரணி பேரூராட்சியில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பேருந்து நிலையம் அமைப்பது பற்றி பேரூராட்சிகள் கூடுதல் இயக்குனர் ஆய்வு செய்தார்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட ஆரணி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் சுமார் 19. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் காவல் நிலையம், சார் பதிவாளர் அலுவலகம், பிஎஸ்என்எல் அலுவலகம், தபால் நிலையம், அரசு மற்றும் தனியார் வங்கிகள், அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன.

மேலும் இப்பகுதி மக்கள் பெரும்பாலும் நெசவு தொழில் செய்து வருகின்றனர். இங்கு புடவை, லுங்கி, உள்ளிட்ட உடைகளை தயார் செய்து இங்கிருந்து சென்னை டி. நகர் பகுதியில் உள்ள ஜவுளி கடைகளில் வியாபாரம் செய்வார்கள். மேலும் இந்த ஆரணியை சுற்றி பாலவாக்கம், மல்லியன் குப்பம், திருநிலை, மங்கலம், காரணி, புதுப்பாளையம், குமரப்பேட்டை, உள்ளிட்ட 20.க்கு மேற்பட்ட கிராமங்களில் பெரும்பாலும் மக்கள் பல ஆண்டு காலமாக விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.

மேற்கொண்ட பகுதியில் விவசாயிகள் நெற்பயிர்கள், கத்திரி, வெண்டை, முள்ளங்கி, கீரை வகைகள், பூக்கள் உள்ளிட்ட பருவத்திற்கு ஏற்ப பயிர்களை பயிரிட்டு அவற்றை அறுவடை செய்து ஆரணிக்கு கொண்டு வந்து இங்கிருந்து மேற்கண்ட காய்கறிகள், மற்றும் பூக்களை சென்னை கோயம்பேடு வணிக வளாகம், கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், பொன்னேரி, செங்குன்றம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விவசாயிகள் கொண்டு சென்று வியாபாரம் செய்து செய்வார்கள்.

இது மட்டுமல்லாமல் மேற்கண்ட அலுவலகங்களுக்கு, மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பள்ளி மாணவர்களும், கல்லூரிக்கு செல்லும் மாணவர்களும், தொழிற்சாலைக்கு செல்லும் தொழிலாளர்களும் ஆரணியில் இருந்து பேருந்து ஏறி தாங்கள் செல்லும் பகுதிகளுக்கு பேருந்துகள் மூலம் பயணம் செய்து வருகின்றனர்.

இதனையடுத்து சுற்று வட்டார கிராமங்களுக்கு மையமாகக் கொண்ட இந்த ஆரணி பேரூராட்சியில் தற்போது வரை பேருந்து நிலையம் அமைக்கப்படவில்லை. வளர்ந்து வரும் ஆரணி பேரூராட்சியில் சுமார் 125 ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் இங்கு பேருந்து நிலையம் அமைத்து தர வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கும், சட்டமன்ற உறுப்பினருக்கும், பாராளுமன்ற உறுப்பினருக்கு மனு அளித்தும் வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என இப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.

இங்கு பேருந்து நிலையம் இல்லாத காரணத்தினால் பள்ளி மாணவர்களும், பணி நிமித்தமாக வந்து செல்லும் அரசு அதிகாரிகளும், விவசாய பெருமக்களும் சாலை ஓரங்களில் உள்ள கடை கூரைகளின் கீழ் வெயில் மழை எனும் பார்க்காமல் நின்று பயணம் செய்து செல்கின்றனர்.


இது குறித்து பகுதி மக்கள் தெரிவிக்கையில் 125 ஆண்டு காலமாக ஆரணி பேரூராட்சியில் பேருந்து நிலையம் அமைத்து தர வேண்டும் என பல்வேறு தரப்பு அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் கோரிக்கை வைத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் உரிய நிலம் இருந்தும் ஆக்கிரமிப்பாளர்கள் அந்த நிலம் உள்ளதாகவும், பலமுறை அரசு அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் இடம் தேர்வு செய்தும் அதற்கு உண்டான வேலை ஏதும் நடைபெறவில்லை என்றும் இது மட்டுமல்லாமல் ஆரணி பேரூராட்சியில் நடைபெறும் தேர்தலில் நிற்கும் உறுப்பினர்கள் தங்களுக்கு வாக்களித்தால் கட்டாயமாக நீண்ட நாள் கோரிக்கையான பேருந்து நிலையம் கொண்டுவரப்படும் என வெறும் வாய் வார்த்தைகளாகவே கூறிக் கொண்டு பின்னர் வெற்றி பெற்றவுடன் இதைப் பற்றி கண்டு கொள்வதில்லை என்றும். எனவே தற்போது இருக்கின்ற திமுக அரசனது மக்களின் நலனை கருதி ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கியுள்ள நிலத்தை மீட்டு பேருந்து நிலையம் அமைத்து தர வேண்டும் என ஆரணி பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் இந்த பிரச்சனை குறித்து முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு சென்ற மனுக்கள் அடிப்படையில் இது குறித்து கடந்த ஆகஸ்ட் மாதம் 2 ம்தேதி அன்று இன்ஸ்டா நியூஸ் இணையதளத்தில் செய்தியும் வெளியாகி இருந்தது.

இதன் எதிரொலியாக தப்போது தமிழக பேரூராட்சிகளின் கூடுதல் இயக்குனர் மலையான் திருமுடிக்காரி ஆரணி பேரூராட்சியில் திடீர் ஆய்வு மேற்கொண்டு பேருந்து நிலையம் அமைக்க பேரூராட்சிக்கு சொந்தமான இடங்களில் போதுமான இடம் எது என்று தேர்வு செய்து அதனை மாவட்ட ஆட்சியரின் பரிந்துரைக்கு அனுப்புமாறு உத்தரவிட்டார். மேலும் மாணவ மாணவியர் பள்ளி நேரங்களில் வெயிலில் நிற்பதை தவிர்க்க நிழற்குடைகள் அமைத்து தர வேண்டும் என்று உத்தரவிட்டார்.

பிறகு திடக்கழிவு மேலாண்மை குப்பைகள் தினமும் வீடுகளில் மற்றும் கடைகளில் தொழிற்சாலைகளிலும் குப்பைகள் எவ்வாறு சேகரித்து தரம் பிரித்து உரமாக்கப்படுகிறது என்பதை கேட்டறிந்தார். முறையாக குப்பைகள் தரம் பிரிக்கப்படாமல் இருந்தால் சம்மந்தப்பட்ட ஊழியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இதனையடுத்து ஆரணி பேரூராட்சிக்கு சொந்தமான காய்கறி மார்க்கெட் மற்றும் இறைச்சி மார்க்கெட்டை பார்வையிட்டு மிகவும் சேதம் அடைந்து உள்ள இந்த மார்க்கெட்டை அகற்றிவிட்டு புதிதாக கட்டித் தரப்பட வேண்டும் என்றும் அதன் மூலம் பேரூராட்சிக்கு வருவாய் கிடைக்கும் என்றும் தெரிவித்தார். உடனடியாக மார்க்கெட் பணிகளை செயல்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வில் பேரூராட்சி உதவி இயக்குனர் லதா (பொறுப்பு) . மற்றும் செயல் அலுவலர் பாஸ்கரன் (பொறுப்பு) பேரூராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி மற்றும் துணைத் தலைவர் சுகுமார் வார்டு கவுன்சிலர்கள் கண்ணதாசன். சுபாஷ்ணி ரவி. சுஜாதா ரவி. குமார் . சுகன்யா தினேஷ். பிரபாவதி உட்பட பலர் உடன் இருந்தனர்.

Updated On: 19 Sep 2023 5:38 AM GMT

Related News