/* */

பெரியபாளையம் மேம்பாலத்தின் கீழ் குப்பை கொட்டுவதால் சுகாதார கேடு

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் மேம்பாலத்தின் கீழ் குப்பை கொட்டுவதால் சுகாதார கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.

HIGHLIGHTS

பெரியபாளையம் மேம்பாலத்தின் கீழ் குப்பை கொட்டுவதால் சுகாதார கேடு
X

பெரியபாளையம் மேம்பாலத்தின் கீழ் குவிந்து கிடக்கும் குப்பை.

ஆரணி ஆற்றின் நீரில் குப்பை, மீன் இறைச்சி கழிவுகள் கொட்டி செல்வதால் நீரில் மாசு ஏற்படுவதோடு துர்நாற்றம் வீசுகிறது. தொற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதால்இதனை தடுக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பெரியபாளையம் கோவிலுக்கு வரும் பக்தர்களும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையத்தில் சுயம்புவாக எழுந்தருளி புகழ்பெற்ற பவானி அம்மன் கோவில் ஆரணி ஆற்றங்கரை அருகே அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆடி மாதம் ஆடி திருவிழா தொடர்ந்து 14 வார காலம் வெகு விமரிசையாக நடைபெறும். இக்கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் சொந்த வாகனங்கள் மற்றும் பேருந்துகளில் பெரியபாளையம் வந்து வாடகை விடுதிகளை எடுத்து தங்கி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை முடி காணிக்கை செலுத்தி ஆடு,கோழி, என பலியிட்டு அம்மனை வழிபட்டு செல்வார்கள்.

இந்த பவானி அம்மன் கோவில் அருகே ஆரணி ஆறு செல்கிறது. இந்த ஆரணி ஆறானது ஆந்திர மாநிலம் பிச்சாட்டூரில் இருந்து துவங்கி ஊத்துக்கோட்டை, பாலவாக்கம், காக்கவாக்கம், தும்பாக்கம், தண்டலம், பெரியபாளையம், மங்கலம், புதுப்பாளையம், ஏ. என். குப்பம், புது வாயல், பொன்னேரி வழியாக பழவேற்காடு வரையில் 108 கிலோமீட்டர் தூரம் பாய்ந்து இந்த ஆரணி ஆறு வங்கக்கடலில் சென்று கலக்குகிறது. மழைக்காலங்களில் பிச்சாட்டூர் அணை நிரம்பினால் உபரநீரானது ஆரணி ஆற்றில் சிறந்து விடப்பட்டு வெள்ள நீரானது வங்க கடலில் சென்று சேருகிறது.

இந்த தண்ணீரை வீணாக கடலில் கலப்பதை தடுக்கும் வகையிலும் விவசாயத்திற்கு தண்ணீர் வழங்குவதற்கும் தமிழக அரசு ஆரணி ஆற்றில் பல்வேறு பகுதிகளில் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணைகளை கட்டி தண்ணீரை சேமித்து விவசாயத்திற்கும், குடிநீருக்குமாக பாதுகாத்து வருகிறது. மேலும் மேற்கண்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பல நூறு ஏக்கரில் பருவத்திற்கு ஏற்ப பயிர்களை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் பெரியபாளையம் ஆரணி ஆற்று குறுக்கே கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தின் கீழ் பெரியபாளையத்தில் உள்ள ஓட்டல்கள், மீன் இறைச்சி கடைகள் வெளியேறும் கழிவுகளை கடைக்காரர்கள் கொண்டு வந்து மேம்பாலத்தில் கொட்டி செல்வதால் அங்கு சேமித்து வைக்கப்பட்டுள்ள நீரில் கலந்து தண்ணீர் மாசு ஏற்படுவதோடு துர்நாற்றம் வீசுகிறது.


மேலும் அதில் கொசுக்கள் உற்பத்தியாகி கடிப்பதால் அப்பகுதி மக்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது. இது மட்டுமல்லாமல் கோவிலுக்கு வந்து தங்கி செல்லும் பக்தர்கள் வசதிக்காக தனி நபர்கள் கட்டியுள்ள விடுதிகளில் இருந்தும் ஆரணி ஆற்றங்கரை மீது கட்டப்பட்டுள்ள வீடுகளில் பயன்படுத்தும் கழிவு நீரை பிளாஸ்டிக் பைப்புகள் மூலம் திறந்து விடப்படுவதால் இந்த கழிவு நீரும் தண்ணீரில் கலந்து நிலத்தடி நீர் பாதிக்கப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே இதுபோன்று செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பெரியபாளையம் கிராம பொதுமக்கள் கோவிலுக்கு வரும் பக்தர்கள் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில் பெரியபாளையம் ஊராட்சியில் ஊராட்சி சார்பில் குப்பை தொட்டிகளை வைக்காததால் வேறு வழியின்றி குப்பைகளை கொண்டு சென்று மேம்பாலத்தின் கீழ் கொட்டி வருவதாகவும், சாலையில் உள்ள குப்பைகள் மட்டும் நாள்தோறும் காலையில் பணியாளர்களை வைத்து சுத்தம் செய்வதாகவும் மீன் இறைச்சி மற்றும் உணவகங்கள் அமைந்துள்ள பகுதிகளில் குப்பை தொட்டிகள் வைக்கவில்லை என்றும் இது குறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் சிலர் குற்றம் சாட்டியுள்ளனர் எனவே மேற்கண்ட பகுதிகளில் பெரியபாளையம் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் குப்பை தொட்டிகளை அமைத்திட வேண்டும் என்று கோரிக்கை எரிந்துள்ளது.

Updated On: 19 Jun 2023 8:44 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஈடற்ற அண்ணனுக்கு திருமணநாள் வாழ்த்துகள்
  2. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்ற என் தாய்க்கு இன்று பிறந்தநாள்..!
  3. வீடியோ
    சென்னையில் மழை வெள்ளம் 4ஆயிரம் கோடி ரூபாய் என்னாச்சி ?#chennai...
  4. லைஃப்ஸ்டைல்
    முதல் ஆண்டு திருமண நாள்: இனிய வாழ்த்துகளும், ஊக்கமளிக்கும்...
  5. வீடியோ
    Vijay கட்சியை பற்றி Vetrimaaran கருத்து !#vijay #actorvijay...
  6. வீடியோ
    Viduthalai 2 படத்தின் Update கொடுத்த Vetrimaaran ! #vetrimaaran...
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை எனும் பயணத்தில்.. திருமண நாள் வாழ்த்துகள்..!
  8. திருவள்ளூர்
    அன்னபூர்ணாம்பிகை உடனுறை ஸ்ரீ ஜமுக்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
  9. வீடியோ
    நண்பர்களுடன் போதை பொருளை தேடி செல்லும் இளைஞர்கள் !#friends #drugs...
  10. நாமக்கல்
    முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு கல்வி பயில இட ஒதுக்கீடு