/* */

பெரிபாளையம் அருகே ஸ்ரீ ஏகாத்தம்மன் கோவில் தீ மிதி திருவிழா

பெரிபாளையம் அருகே ஸ்ரீ ஏகாத்தம்மன் கோவில் தீ மிதி திருவிழாவில் ஐநூறுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்தனர்.

HIGHLIGHTS

பெரிபாளையம் அருகே  ஸ்ரீ ஏகாத்தம்மன் கோவில் தீ மிதி திருவிழா
X

தீ மிதித்த பக்தர்கள்.

பெரியபாளையம் அருகே வானியஞ்சத்திரம் கிராமத்தில் ஏகாத்தம்மன் ஆலய 15 ஆம் ஆண்டு தீமிதி திருவிழாவில் 500பக்தர்கள் தீ மிதித்து அம்மனை வழிபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம். கன்னிகாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட வானியஞ்சத்திரம் கிராமத்தில் சுமார் 300 ஆண்டுகளுக்கு பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ ஏகாத்தம்மன் ஆலயம் உள்ளது. சிதிலமடைந்த நிலையில் கிராம மக்களின் பங்களிப்புடன் கடந்த 20.ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக கோவிலை எழுப்பி கும்பாபிஷேகம் நடைபெற்று தொடர்ச்சியாக ஆண்டுதோறும் தீ மிதி திருவிழா நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஆலயத்தின் 15.ஆம் ஆண்டு தீமிதி திருவிழா வெகு விமரிசையாக கோலாகலமாக நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு கடந்த 26 ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஆலய வளாகத்தில் கொடி ஏற்றும் கங்கை நீர் திருட்டுதல், கூழ் வார்த்தல், பெண்கள் பால்குடம் எடுத்து, மேல தாளம் முழங்க ஊர்வலமாக வந்து ஸ்ரீ ஏகாத்த அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர் பின்னர் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது. தொடர்ந்து காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 30.தேதி அன்று சென்னை திருப்போரூர் அருள்மிகு கந்தப் பெருமானுக்கு திருநீற்று பாலாபிஷேகமும், புஷ்ப அலங்காரம் நடைபெற்றது.


இதனையடுத்து கங்கை அம்மனுக்கு கூழ்வார்த்தல் ஆலய வளாகத்தில் பெண்கள் பொங்கல் வைத்து படையல் போடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.1ஆம் தேதி அன்னதானமும் நடைபெற்றது. 2.ம்தேதி பக்தர்கள் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் கரகம் ஊர் எல்லையை சுற்றி வருதல் நிகழ்ச்சியும்,3 ஆம் தேதி அக்னி சட்டி ஏந்தி வீதி உலா வரும் நிகழ்ச்சியும்,4 ஆம் தேதி அம்பாளுக்கு பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்தல் அம்பாள் தனது அடியார்களுக்கு தீமிதித்தல் எனும் பூ குண்டத்தில் திரு நடனம் புரிதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. கடைசி நாளான 5ம்தேதி ஞாயிற்றுக்கிழமை காலை அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், ஜவ்வாது, குங்குமம், மஞ்சள், இளநீர், தேன், பன்னீர், உள்ளிட்ட வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வண்ண மலர்களாலும் திரு ஆபரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீப தூப ஆராதனை காண்பிக்கப்பட்டது.

மாலை காப்பு கட்டி விரதம் இருந்த 500பக்தர்கள் நேற்று மாலை ஆலயம் அருகே புனித நீராடி காத்திருந்தனர். அவர்களை அம்மன் சென்று ஆலயத்திற்கு அழைத்து வரும் நிகழ்ச்சியை தொடர்ந்து ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் ஒருவருக்கு ஒருவர் பின் இறங்கி தீ மிதித்து அம்மனை வழிபட்டு தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழா குழுவினரும், கிராம பொதுமக்கள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

Updated On: 5 Jun 2023 6:37 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு