/* */

நாள் ஒன்றுக்கு 60 லட்சம் பால் பாக்கெட்டுகள் விநியோகம்: அமைச்சர் நாசர்

தமிழகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு 60 லட்சம் பால் பாக்கெட்டுகள் தட்டுப்பாடின்றி சீரான முறையில் விநியோகிப்பதாக அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

நாள் ஒன்றுக்கு 60 லட்சம் பால் பாக்கெட்டுகள் விநியோகம்:  அமைச்சர் நாசர்
X

 திருவள்ளூர் அருகே காக்களுரில்நூலக கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற பால்வளத்துறை அமைச்சர் நாசர்.

திருவள்ளூர் அடுத்த காக்களூர் ஊராட்சியில் திருவள்ளூர்எம் பி , மற்றும் பூந்தமல்லிஎம் எல் ஏ,ஆகியோரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் புதிய நூலக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.

இவ்விழாவிற்கு ஒன்றிய கவுன்சிலர் த.எத்திராஜ் தலைமை தாங்கினார். இதில் மாநில ஆதி திராவிடர் நலக்குழு செயலாளரும் பூந்தமல்லி எம்எல்ஏ.வுமான ஆ.கிருஷ்ணசாமி, திருவள்ளூர்எம் பி , கே.ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பால்வளத்துறை அமைச்சர்ஆவடி நாசர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நூலக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய குழு பெருந்தலைவர் ஜெயசீலி ஜெயபாலன், ஒன்றிய செயலாளர் ஆர்.ஜெயசீலன், துணை தலைவர் பர்கத்துல்லாகான்,காக்களூர் ஊராட்சி மன்ற தலைவர் சுபத்ரா ராஜ்குமார், நிர்வாகிகள் நரேஷ்குமார், தென்னவன், கே.கே.சொக்கலிங்கம், த.சுகுமார், டி.கே.பூவண்ணன், எஸ்.என்.குமார் உள்ளிட்ட திமுக மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், பால் உற்பத்தியாளர்கள் சங்க போராட்டத்தால் பால் விநியோகத்தில் எந்த பாதிப்பும் இல்லை. தமிழகத்தில் ஆவின் பால் தட்டுப்பாடின்றி சீரான முறையில் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார் . மேலும் தமிழகம் முழுவதும் ஆவினில் 9354 பால் உற்பத்தியாளர்கள் சங்கம் பதிவு செய்யப்பட்டு இயங்கி வருகிறது. அதில் ஒரே ஒரு சங்கம் மட்டும் தன்னை சந்தித்து பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டுமென கோரிக்கை வைத்தது.

இரண்டு மாதத்துக்கு முன்பு தான் கொள்முதல் விலையை மூன்று ரூபாய் உயர்த்தி கொடுக்கப்பட்டது. மீண்டும் பால் கொள்முதல் விலை உயர்த்தி தர அவர்கள் கோரிக்கை வைத்திருக்கின்றனர். அவர்கள் கோரிக்கை முதல்வரிடம் எடுத்துக் கூறி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், ஒரே ஒரு பால் சங்கம் மட்டும் ஆவின் நிறுவனத்திற்கு பால் அனுப்ப மாட்டோம் என தெரிவித்திருக்கின்றனர்.

பால் உற்பத்தியாளர்கள் சங்க போராட்டத்தால் எந்தவித பாதிப்பும் இன்றி ஆவினுக்கு பால் வரத்து தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது. ஒரு நாளைக்கு 60 லட்சம் பால் பாக்கெட்டுகள் சீரான முறையில் தமிழகம் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. உற்பத்தியாளர்கள் போராட்டத்தால் எந்தவித பாதிப்பும் இல்லாமல் தமிழக முழுவதும் ஆவின் மூலமாக சீராக விநியோகம் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

Updated On: 18 March 2023 5:45 AM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  2. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!
  3. லைஃப்ஸ்டைல்
    உயிர்வாழ உணவு வேண்டும்..! உணவுக்கு..??
  4. லைஃப்ஸ்டைல்
    இறைவனின் தத்துவம் சொல்லும் ஆன்மிக மேற்கோள்கள்!
  5. லைஃப்ஸ்டைல்
    விழிகள், அது நம்பிக்கையின் ஒளி..!
  6. வீடியோ
    தலைகீழாக மாறிய தேர்தல் களம் | அதிர்ச்சியில் Siddaramaiah Gang |...
  7. லைஃப்ஸ்டைல்
    நரம்பு ஆரோக்கியத்திற்கான அற்புத உணவுகள் பற்றி தெரிஞ்சுக்குங்க!
  8. பழநி
    பழனி கோவில் யானை நீச்சல் தொட்டியில் ஆனந்த குளியல்
  9. லைஃப்ஸ்டைல்
    பலாக்காய், பலாப்பழத்தை பயன்படுத்தி இத்தனை வகை உணவுகள் செய்யலாமா?
  10. லைஃப்ஸ்டைல்
    ருசியான உருளைக்கிழங்கு குருமா செய்வது எப்படி?