பெரியபாளையத்திற்கு வந்த திருக்குடைகளுக்கு பக்தர்கள் வரவேற்பு

திருப்பதி திருக்கடைகளுக்கு பெரியபாளையத்தில் சிறப்பான முறையில் பக்தர்கள் வரவேற்பு அளித்தனர்

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
பெரியபாளையத்திற்கு வந்த திருக்குடைகளுக்கு பக்தர்கள் வரவேற்பு
X

சென்னையில் இருந்து புறப்பட்ட திருப்பதி திருமலை திருக்குடைகளுக்கு பெரியபாளையத்தில் பக்தர்கள் சிறப்பான வரவேற்பு அளித்து சுவாமி தரிசனம் செய்தனர்.

ஆந்திர மாநிலம், திருப்பதி-திருமலையில் உள்ள வெங்கடாஜலபதிக்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பிரம்மோற்ச விழா மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழகத்தின் சார்பில் சென்னையில் இருந்து திருப்பதி-திருமலைக்கு திருக்குடைகள் பாதயாத்திரையாக கொண்டு சென்று சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி தொடர்ந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சென்னையில் இருந்து புறப்பட்ட இந்த திருக்குடைகள் மற்றும் பாதுகைகள் திருநின்றவூர் வந்தடைந்தது.டாக்டர் வி.பி.ராமகிருஷ்ணா திருமண மண்டபத்தில் திங்கள் கிழமையான நேற்று காலை திருகுடைகள் விழா குழுவினர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் ஸ்ரீமத் ராமானுஜ கைங்கர்ய டிரஸ்ட் நிர்வாகிகள் 19-ம் ஆண்டாக பெரியபாளையம் வழியாக ஊத்துக்கோட்டைக்கு இந்த திருக்குடைகளையும், பாதுகைகளையும் கொண்டு வந்தனர். பெரியபாளையம் பஸ் நிலையம் நோக்கி இன்று காலை இந்த திருக்குடைகள், பாதுகைகள் வந்தது.அப்போது பெரியபாளையம் ஸ்வீட் ராஜா குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள்,பொதுமக்கள், பக்தர்கள் இந்த திருக்குடைகள், பாதுகைகளுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

இதன் பின்னர், இங்கு அமைக்கப்பட்டு இருந்த பந்தலில் வைத்து பாதுகைக்கு சிறப்பு பூஜை செய்தனர். இதன் பின்னர், இப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஒருவர் பின், ஒருவராக வந்து இந்தப் பாதுகையை வணங்கி சென்றனர்.இதன் பின்னர், அனைத்து பக்தர்களுக்கும் ஸ்வீட் ராஜா குடும்பத்தினர் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து திருக்குடைகளும், பாதுகைகளும் போலீஸ் பாதுகாப்புடன் ஊத்துக்கோட்டை நோக்கி சென்றது.இந்தத் திருக்குடைகள் வெள்ளிக்கிழமை காலை திருமலையில் உள்ள ஸ்ரீ மலையப்ப சுவாமி கோவிலில் சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை இரவு கருட சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.





Updated On: 19 Sep 2023 10:15 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    சாலை விபத்தில் பெண் பலி உள்ளிட்ட குமாரபாளையம் பகுதி க்ரைம் செய்திகள்
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி பகுதியில் 106 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை நடவடிக்கை
  3. குமாரபாளையம்
    அகில இந்திய மல்யுத்த போட்டி: குமாரபாளையம் பயிற்சியாளர் நடுவராக
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையத்தில் விபத்தில் சிக்கிய சரக்கு ரயில்
  5. ஈரோடு மாநகரம்
    ஈரோட்டில் காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறப்பு
  6. ஈரோடு மாநகரம்
    ஈரோடு கனி மார்க்கெட் மீண்டும் செயல் பட தொடங்கியதால் மகிழ்ச்சியில்...
  7. தென்காசி
    தென்காசியில் ஏ.ஐ.சி.சி.டி.யு. தொழிற்சங்கத்தின் மாவட்ட மாநாடு
  8. சினிமா
    நடிகை ஸ்ரீதேவி மரணம் தொடர்பாக கணவர் போனி கபூர் மீண்டும் சர்ச்சை
  9. தென்காசி
    தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு பணம் அனுப்பிய பொதுமக்கள்
  10. ஆலங்குளம்
    மிளா தாக்கி இளைஞர் உயிரிழப்பு: வனவிலங்குகளை கட்டுப்படுத்த கோரிக்கை