/* */

விபத்து ஏற்படும் முன் விழிப்பார்களா? கோடு வெளி ஊராட்சி, காரணிப்பேட்டை பகுதியில் பழுதான மின்கம்பங்களை சீரமைக்க கோரிக்கை

damaged electric post to be changedதிருவள்ளூர் மாவட்டத்தி்லுள்ள காரணிப்பேட்டைபகுதியில் பழுதான மின்கம்பங்களை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

damaged electric post to be changed


மின்கம்பத்தின் உள்ளே உள்ள கான்கிரீட் கம்பி வெளியே தெரிகிறது. மரம் , செடி, கொடிகளும் அதிகம்வளந்து காணப்படுகிறது. உயிர்ப்பலி ஏற்படும் முன் விழிப்பார்களா மின் வாரிய அதிகாரிகள்?விமோசனம் கிடைக்குமா?

damaged electric post to be changed

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் கோடுவெளி ஊராட்சி காரணிப்பேட்டையிலிருந்து குருவாயல் செல்லும் சாலை இரு புறம் பகுதிகளில 10க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் அமைந்துள்ளன.இக்கம்பங்கள், அனைத்தும், 20 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட பழமையான மின் கம்பம் என்பதால்இதில் செல்லும் மின் கம்பிகளை தாங்கி பிடிக்கும் இரும்பு ராடுகள், துருப்பிடித்து எப்போது கீழே முறிந்து விழும் என்ற ஆபத்தான நிலையில் உள்ளன. இதனால் கிராம மக்கள் அச்சத்துடன் நடமாடுகின்றனர்.

மேலும் குறிப்பாக காரணிப்பேட்டையில் இருந்து குருவாயல் செல்லும் சாலை அருகே மின்மாற்றியின் இரண்டு சிமெண்ட் கம்பங்கள் பழுதடைந்து சிமெண்ட் கான்கிரீட் பூசுகள் உதிர்ந்து அதில் உள்ள கம்பிகள் வெளியே தெரிந்த படி ஆபத்தான நிலையில் உள்ளது எந்த நேரத்திலும் முறிந்து சரிந்து கீழே விழுந்தால் ஆபத்து உருவாகும் அபாயம் உள்ளது. இது மட்டுமல்லாமல் குருவாயல் சாலை ஓரங்களிலும் உள்ள மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் உள்ளது அதில் செல்லும் மின் கம்பிகள் தாழ்வான நிலையில் செல்கின்றன மின்வாரிய அதிகாரிகள் கண்டுகொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கிராம மக்கள் சிலர் கூறுகையில் பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட மின் கம்பங்கள் என்பதால், இப்பகுதியில், உள்ள மின்கம்பங்கள் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் மேலும் சாலை ஓரம் வயல்களில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்கள் சாய்ந்த படி அதில் உள்ள மின் ஒயர்கள் கைக்கட்டும் தூரத்திலேதொங்குகின்றன

damaged electric post to be சங்கேத

மழைக்காலங்களில் சற்று காற்று வேகமாக வீசினால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் பொதுமக்கள் மீது விழுந்துவிடுமோ என்ற அச்சத்தில் செல்வதாகவும் தவறி சாலையில் விழுந்தால் உயிர் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் மாதாந்திர பராமரிப்பு பணி என்ற பெயரில் எந்தவித பணிகள் நடைபெறுவதில்லை என்றும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் மின் கம்பிகளில் செடி கொடிகள் வளர்ந்துள்ளதாகவும் இது குறித்து பலமுறை எடுத்துக் கூறியும் எந்தவித நடவடிக்கை மின்வாரிய அதிகாரிகள் எடுக்கவில்லை குற்றம் சாட்டு வருகின்றனர். எனவே ஆபத்து விளையும் முன்பே இப்பகுதியில் உள்ள பழுதடைந்த பழைய மின் கம்பங்களை அனைத்தையும் அகற்றிவிட்டு புதிய கம்பங்களை மாற்றவேண்டும் எனவும், ஒட்டு போட்ட மின் ஒயர்களை அகற்றி புதிய மின் ஒயர்களை மாற்றி தர வேண்டுமென அப்பகுதி மக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்..

Updated On: 5 Sep 2022 3:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  3. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  4. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  5. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  6. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  7. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  8. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மீன ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. தொழில்நுட்பம்
    ககன்யான் திட்டத்தின் அடுத்த கட்டம்: பாராசூட் சோதனையில் இஸ்ரோ!