/* */

திருவூர் ஊராட்சியில் ரூ.1.50 கோடியில் சமுதாயக் கூடம்: எம்எல்ஏ., அடிக்கல்

திருவூர் ஊராட்சியில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் சமுதாயக் கூடம் அமைக்க பூந்தமல்லி எம்எல்ஏ., அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

திருவூர் ஊராட்சியில் ரூ.1.50 கோடியில் சமுதாயக் கூடம்: எம்எல்ஏ., அடிக்கல்
X

புதிய சமுதாயக் கூடம் அமைப்பதற்கான பூமி பூஜை.

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவள்ளூர் ஒன்றியம் திருவூர் ஊராட்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் புதிய சமுதாயக் கூடம் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

இந்த அடிக்கல் நாட்டு விழாவுக்கு பூந்தமல்லி எம்எல்ஏ., ஆ.கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். ஒன்றிய குழு பெருந்தலைவர் ஜெயசீலி ஜெயபாலன், துணைத் தலைவர் எம்.பர்க்கத்துல்லாகான், ஒன்றிய செயலாளர் பிரேம் ஆனந்த், நிர்வாகிகள் ஜி.விமல்வர்ஷன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் நிர்வாகிகள் குட்டி (எ)பக்தவச்சலு, மகேஸ்வரி பாலவிநாயகம், ஆர்.திலீப்ராஜ், ஆர்.பழனி, கே.கிரி, வேதவள்ளி சதீஷ்குமார், திருவூர் சங்கர் ஆகியோர் வரவேற்றனர்.

இந்த பூமி பூஜையில் முதல் செங்கல்லை எடுத்துக் கொடுத்து கட்டுமானப் பணியை தொடங்கி வைத்து பூந்தமல்லி எம்எல்ஏ., பேசினார். அப்போது, தற்போது திருவூர் ஊராட்சியில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் சமுதாயக் கூடம் ஆதிதிராவிடர் மக்களுக்காக மட்டுமல்லாமல், விளிம்பு நிலையில் உள்ள ஏழை எளிய மக்கள் அனைவரும் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். இதே போல் கண்ணப்பாளையம், வெள்ளியூர் ஆகிய இடங்களில் சமுதாயக் கூடம் கட்டியிருப்பதாக தெரிவித்தார். மேலும், சட்டமன்றத்தில் ஆதி திராவிட எம்எல்ஏ.க்கள் மட்டுமல்லாது, அனைத்து எம்எல்ஏக்களும் சமுதாயக் கூடம் கட்ட வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆண்டுக்கு 20 சமுதாயக் கூடம் அமைக்க அரசு ஒப்புதல் அளித்து வருகிறது. பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தொட்டிக்கலை ஊராட்சியிலும் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் சமுதாயக் கூடம் அமைக்கப்பட உள்ளது. இவ்வாறு பூந்தமல்லி எம்எல்ஏ., ஆ.கிருஷ்ணசாமி பேசும் போது தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் தாமரை செல்வன், கஜேந்திரன், சுபாஷ் சந்திரபோஸ், அன்புநாதன், லட்சுமிபதி, சரவணகுமார், சசி பிரதாப், துரைராஜ், முருகதாஸ், மகேஷ், சுரேந்தர், வினோத், முனுசாமி, ரொமாரியே, நாகராஜ், ரவிகுமார், ராதாகிருஷ்ணன், சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 7 May 2023 4:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்