/* */

திருவள்ளூர் அருகே பாம்பு கடித்ததில் சிறுவன் உயிரிழப்பு

Suruttai Pambu-திருவள்ளூர் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இரண்டு சிறுவர்களை பாம்பு கடித்ததில் ஒரு சிறுவன் உயிரிழப்பு. மற்ற சிறுவன் சிகிச்சை பெற்று வருகிறார்.

HIGHLIGHTS

திருவள்ளூர் அருகே பாம்பு கடித்ததில் சிறுவன் உயிரிழப்பு
X

கட்டுவிரியன் பாம்பு கடித்த சிறுவர்கள்

Suruttai Pambu-திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த ஆரணியை எஸ்.பி. கோவில் தெருவில் வசித்து வருபவர் கூலி தொழிலாளியான பாபு. இவருக்கு திருமணம் ஆகி மனைவி விஜயலட்சுமி மற்றும் ரமேஷ் (13), தேவராஜ் (10) என்ற இரு மகன்கள் உள்ளனர். இவர்கள் ஆரணி பேரூராட்சியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வந்தனர்.

நேற்றிரவு சிறுவர்கள் இருவரும் அவர்களது குடிசை வீட்டில் குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்த போது கட்டுவிரியன் பாம்பு வீட்டில் புகுந்து தூங்கிக் கொண்டிருந்த சிறுவர்கள் அண்ணன் தம்பி இருவரை கடித்துள்ளது. சிறுவர்களின் அலறல் சத்தம் கேட்டு பெற்றோரும், அக்கம் பக்கத்தினரும் பாம்பை அடித்து விட்டு சிறுவர்களை மீட்டு முதல் உதவி சிகிச்சைக்கு வெங்கலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அண்ணன் ரமேஷ் என்ற சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். தம்பி தேவராஜ் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து ஆரணி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் பாம்பு கடித்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

நாகப்பாம்பு, கண்ணாடி விரியன், சுருட்டை விரியன், கட்டுவிரியன் ஆகிய நான்கு விஷப் பாம்புகளால் அதிக இறப்புகள் ஏற்படுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், பாம்புக்கடியால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் ஆண்கள்தான் என்றும் குறிப்பாக விவசாயிகள், பழங்குடியினர், நகரப் பகுதிகளில் அடர்ந்த பகுதிகளுக்குச் செல்வோர் பாம்புக்கடிக்கு ஆளாகின்றனர். அதுபோல, இயற்கை உபாதை கழிக்கச் செல்லும் கிராமப்புற பெண்களும் பாம்புக்கடியால் பாதிக்கப்படுகின்றனர்.

தேசிய சுகாதார விவரக்குறிப்பு தரவின்படி, தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு 78 பேர் பாம்பு கடித்து உயிரிழந்துள்ளனர். நாட்டிலே மேற்குவங்கத்துக்கு(132 இறப்புகள்) அடுத்தபடியாக தமிழகம் இரண்டாம் இடத்தில் இருக்கிறது.

பாம்புகள், தங்களுக்கான உணவு கிடைக்காதபட்சத்தில் வேறு இடங்களுக்குச் செல்கின்றன. அதாவது, பாம்புகள் வாரத்திற்கு ஒருமுறையாவது உணவு உட்கொள்ள வேண்டும். அவ்வாறு உணவு கிடைக்காத நிலையிலேயே அவை உணவு தேடித் செல்லும்போது மனிதர்கள் இடையே வரும்பட்சத்தில், மூர்க்கமடைந்து அவர்களைத் தாக்குகின்றன. மேலும், தற்போது விளைநிலங்கள் அனைத்தும் குடியிருப்புகளாக மாறிவருவதும் அவை உணவு தேடி மனித வாழ்விடங்களுக்குச் செல்ல காரணம்.

எனவே, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பாம்பு மீட்கும் மையத்தை ஏற்படுத்தி இதனை கண்காணிக்க வேண்டும் என்று பாம்புகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 5 April 2024 7:06 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க