/* */

ஊத்துக்கோட்டையில் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் சங்க சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

ஊத்துக்கோட்டையில் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
X

பைல் படம்.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம் ஊத்துக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத்துறை தலைவர் சடையப்பன் தலைமை வகித்தார்.

வட்டச் செயலாளர் பிரகாசம், பொருளாளர் ராஜூ, சங்கத்தின் அமைப்புச் செயலாளர் செல்வராஜ், செய்தி தொடர்பாளர் யுகேந்திரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் சுந்தரராஜன் கலந்துகொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரை ஆற்றினார்.

இதில் புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்திட வேண்டும், பயணப்பட்டியை ரூபாய் 2000 ஆக உயர்த்திட வேண்டும், வருவாய் கிராமங்களை பரப்பளவு மற்றும் மக்கள் தொகைக்கு ஏற்ப பிரித்து புதிய பணியிடங்களை உருவாக்கி வழங்கிட வேண்டும், வருவாய் துறை பணிகளைத் தவிர, பிற துறை பணிகள கிராம நிர்வாக அதிகாரிகள் மீது திணிப்பதை கைவிட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 1 April 2023 4:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு