/* */

10 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்ட வந்த தொழிலாளர்கள் கைது

திருவள்ளூர் அருகே தனியார் நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத செயல்களை கண்டித்து 10 நாட்களாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்

HIGHLIGHTS

10 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்ட வந்த தொழிலாளர்கள்  கைது
X

திருவள்ளூர் அருகே தனியார் நிர்வாகத்தை  கண்டித்து கடந்த 10நாட்களாக இரவு, பகலாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்களை கைது செய்த போலீஸார்

திருவள்ளூர் அருகே தனியார் நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத செயல்பாடுகளை கண்டித்து கடந்த 10நாட்களாக இரவு, பகலாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த சின்னம்பேடு பகுதியில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலையில் 30க்கும் மேற்பட்டோர் நிரந்தர பணியாளர்களாகவும், 50க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த அடிப்படையிலும் பணியாற்றி வருகின்றனர். இந்த தொழிற்சாலையில் வீடு, அலுவலகம், தொழிற்சாலை உள்ளிட்ட இடங்களில் வைப்பதற்கான மேசை, நாற்காலி, அலங்கார பொருட்கள் உள்ளிட்ட மரச்சாமான்கள் தயாரிக்கப்பட்டு வரப்படுகிறது.

இந்த தொழிற்சாலை நிர்வாகத்தின் தொழிலாளர்கள் விரோத போக்கை கண்டித்து தொழிற்சாலை வாயிலில் தொழிலாளர்கள் கடந்த 10நாட்களாக இரவு, பகலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இரண்டு ஆண்டுகளாக நிலுவையில் வைத்துள்ள ஊதிய உயர்வை உடனே வழங்கிட வேண்டும்.

உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு பணப்பலன்களை வழங்கிட வேண்டும், பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிற்சங்க நிர்வாகிகளை மீண்டும் பணியமர்த்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வந்தது. நேற்று ஏஐடியுசி நிர்வாகிகள், காவல்துறையினர் தொழிற்சாலை நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் சில கோரிக்கைகள் ஏற்பதாக கூறிய நிலையில் அனைத்து கோரிக்கைகள் நிறைவேற்ற கோரி தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட மறுத்தனர்.

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். தொடர்ந்து பிரச்சனைகள் குறித்து தொழிலாளர் நல ஆணையரகத்தில் முறையிடுமாறு அறிவுறுத்தி இரவு அனைவரையும் விடுவித்தனர். தொழிலாளர் நல ஆணையரகத்தில் பிரச்சனைக்கு தீர்வு காணாவிடில் மீண்டும் போராட்டம் தொடரும் என தொழிலாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Updated On: 14 March 2023 4:27 AM GMT

Related News

Latest News

  1. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  2. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  5. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!
  6. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  7. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  8. ஈரோடு
    சித்தோடு அருகே 810 கிலோ தங்கம் ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து
  9. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்