/* */

'இன்ஸ்டா நியூஸ்' செய்தி எதிரொலி: அங்கன்வாடி மைய கட்டிடம் சீரமைப்பு பணி துவக்கம்

‘இன்ஸ்டா நியூஸ்’ செய்தி எதிரொலியாக அங்கன்வாடி மைய கட்டிடம் சீரமைப்பு பணி துவங்கி நடந்து வருகிறது.

HIGHLIGHTS

இன்ஸ்டா நியூஸ் செய்தி எதிரொலி: அங்கன்வாடி மைய கட்டிடம் சீரமைப்பு பணி துவக்கம்
X

பழுதடைந்த அங்கன்வாடி மைய கட்டிடம் (கோப்பு படம்).

இன்ஸ்டா நியூஸ் செய்தி எதிரிரொலியாக எல்லாபுரம் அருகே அங்கன்வாடி மைய கட்டிடம் சீரமைப்பு செய்யப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையத்தில் சுமார் 10,000 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சி பாரதியார் நகர் பகுதியில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடத்தில் எம்.ஜி.ஆர். நகர், பாளையக்காரர் தெரு, தர்மராஜா கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 30 க்கு மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர்.

இந்த கட்டிடம் மிகவும் பழைய கட்டிடம் என்பதால் மேற்கூரை ஆங்காங்கு சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து காணப்பட்டது. இதனால் மழைக் காலங்களில் குழந்தைகளுக்காக அரசு வழங்கும் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களில் மழை நீர் மேல் புறத்திலிருந்து கசிந்து பொருட்கள் சேதமடைந்தது.

இது மட்டுமல்லாமல் கட்டிடம் வெளியே மேல்புறம் பகுதியில் விரிசல் விட்டிருந்தது.அதில் செடிகள் வளர்ந்து காணப்பட்டது. மேலும் இப்பகுதியில் கழிவுநீர் செல்ல கால்வாய் இல்லாததால் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரானது சாலையில் பாய்ந்து இந்த அங்கன்வாடி மைய கட்டிடத்தின் நுழைவு வாயில் வளாகத்தில் முன்பு தேங்கி குளம் போல் காட்சி அளித்தது. இதனால் ஆசிரியர் மற்றும் குழந்தைகள் கட்டிடத்துக்குள் செல்ல மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இது குறித்து கடந்த ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி அன்று 'இன்ஸ்டா நியூஸ்' இணைய செய்தி தளத்தில் செய்தி வெளியிடப்பட்டது.

இந்தச் செய்தி எதிரொலியாக கட்டிடத்தை ஆங்காங்கு பழுதுபார்த்து சரி செய்யும் பணிகள் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும் கழிவுநீர் தேங்கி நிற்காத அளவிற்கு கான்கிரீட் கீழ்த்தளம் அமைக்கப்பட்டது.இதனை பார்த்து அங்கன்வாடி மையத்திற்கு வரும் குழந்தைகளின் பெற்றோர்களும் ஆசிரியர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.மேலும் சம்பந்தப்பட்டஅதிகாரிகளின் பார்வைக்கு கொண்டு சென்று சீரமைப்பு பணி நடைபெறுவதற்கு உதவி இன்ஸ்டா நியூஸ் இணைய செய்தி தளத்திற்கு இப் பகுதி மக்கள் நன்றி தெரிவித்து வருகிறார்கள்.

Updated On: 18 Jan 2023 6:57 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  3. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்
  4. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  5. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  6. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  7. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  8. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  9. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  10. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்