/* */

திருவள்ளூர் அருகே முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

திருவள்ளூர் அருகே முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

திருவள்ளூர் அருகே முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
X

கடம்பத்தூர் அரசு மேனிலைப்பள்ளியில் 2005ம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் அரசு மேனிலைப்பள்ளியில் 2005ம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்சியில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துக் கொண்டனர். அப்போது தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். ஓவிய ஆசிரியர் சா.அருணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். பின்னர் அவருக்கு பொன்னாடை மற்றும் சந்தன மாலை அணிவித்து கவுரவித்தனர்.

மாணவர்கள் தெரிவிக்கையில், ஓவிய ஆசிரியரை கண்டாலே எங்களுக்கு ஒரு அச்சம் ஏற்படும் அந்த அளவிற்கு எங்களை கட்டுக்குள் வைத்து ஒழுக்கத்தையும் சிறப்பு வகுப்புக்களை நடத்தி மேம்படுத்த பல முயற்சிகள் எடுத்தார். அப்போது உள்ள ஆசிரியர்களும் எங்களுக்கு நல் கருத்துக்களை வழங்கினர். அதன் காரணமாக பல பேர் அரசு ஊழியர்களாகவும் தனியார்துறையிலும் நல்ல நிலையில் உள்ளோம் என்றனர்.

தற்காலத்தில் மாணவர்கள் நல் ஒழுக்கத்துடன் பயின்று எதிர்காலத்தில் நல்ல நிலைக்கு வரவேண்டும் என்றால், ஆசிரியர்களுக்கு முன்பு போன்று முழு சுதந்திரத்தோடு செயல்பட அனுமதிக்க வேண்டும். அப்போது தான் மாணவர்கள் கட்டுக்குள் கொண்டு வர முடியும்.

மேலும் பள்ளி கட்டடங்களுக்கு வண்ணம் அடித்தல், முதல் மாடி வராண்டா பகுதியில் தடுப்பு சுவர் மீது கிரில் அமைக்க முயற்சி செய்வோம் என்றனர். முன்னதாக 2005 ம் ஆண்டு மாணவர்களில் உயிரிழந்த 4 பேருக்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் ஆசிரியர் சா.அருணன், கேக் வெட்டி மாணவர்களுக்கு ஊட்டிக்கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

Updated On: 20 April 2023 5:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு