/* */

50 ஆண்டுகளுக்கு பின்னர் ஆலப்பாக்கம் ஆலயத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Maha Kumbhabhishekam - 50 ஆண்டுகளுக்கு பின்னர் ஆலப்பாக்கம் ஆலயத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம் மிக சிறப்பாக நடைபெற்றது.

HIGHLIGHTS

50 ஆண்டுகளுக்கு பின்னர் ஆலப்பாக்கம் ஆலயத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம்
X

ஆலப்பாகம் ஆலயத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Maha Kumbhabhishekam -திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அடுத்த 80.ஆலப்பாக்கம் கிராமத்தில் ஓம் ஸ்ரீ அருள்மிகு கிராம தேவதை ஸ்ரீ ஆலயத்தம்மன் திருக்கோவில் சுமார் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாகும். இக்கோவிலில் 50 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு பின்னர் மீண்டும் கிராம மக்கள் ஆலய புனரமைப்பு பணிகளை மேற்கொண்டு கடந்த 5ம்தேதி அன்று பந்த கால் நடும் விழா நடைபெற்று நாள்தோறும் யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில் கணபதி ஹோமம், எஜமான சங்கல்பம், மேதினி பூஜை, வாஸ்து சாந்தி, மகாபூர்ணாகுத்தி, நடைபெற்ற பின்னர் மகா யாகம் வளர்க்கப்பட்டு காலை7 மணி அளவில் புரோகிதர்கள் யாகசாலையில் இருந்து புனித நீர் அடங்கிய கலசங்களை தலையில் ஏந்தி கோவிலை சுற்றி மேல தாளங்கள் முழங்க வலம் வந்து.7.30 மணி அளவில் ஆலயத்தின் மீதுள்ள அம்மனுக்கு மூலவருக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர்.

அங்கு வந்திருந்த திரளான பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மூலவருக்கு பால்,தயிர்,மஞ்சள், சந்தனம்,இளநீர், 108 குங்கும அர்ச்சனை, ஜவ்வாது, தேன்,உள்ளிட்ட வாசன திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீப தூப ஆராதனைகள் நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு ஆலயத்தின் சார்பில் பிரசாதம் மற்றும் அன்னதானங்கள் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம பெரியவர்கள் இளைஞர்கள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர். இதில் ஊராட்சி மன்ற தலைவர் பிரமிளா ஆறுமுகம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இவர்களுக்கு ஆலயத்தின் சார்பில் சிறப்பு செய்யப்பட்டது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 8 Sep 2022 9:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நண்பனின் பிறந்தநாளில் வேடிக்கையா கலாய்க்கலாம் வாங்க
  2. வீடியோ
    பெண் வேடத்தில் வந்த Cool Suresh ! அரண்டுபோன K Raja !#coolsuresh...
  3. இந்தியா
    ஒருபோதும் இந்து அல்லது முஸ்லீம் என்று சொல்லவில்லை: பிரதமர் மோடி
  4. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....
  5. இந்தியா
    NewsClick நிறுவனரை கைது செய்தது செல்லாது, உடனடியாக விடுதலை செய்ய...
  6. பட்டுக்கோட்டை
    காலநிலை அறிந்த பயிர் பாதுகாப்பு : விவசாயிகள் பின்பற்ற அறிவுறுத்தல்..!
  7. வீடியோ
    தானாக வந்து மாட்டிக்கொண்ட Congress புள்ளிகள் | கதிகலங்கிய RahulGandhi...
  8. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  9. லைஃப்ஸ்டைல்
    50 அழகிய மேற்கோள்களுடன் ரமலான் வாழ்த்துக்கள்!
  10. தென்காசி
    பெண்ணின் இருசக்கர வாகனத்தை திருடியதாக ஒருவர் கைது!