/* */

திருவள்ளூரில் 30 நிமிடத்தில் 108 ஆசனம் செய்து உலக சாதனை

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு திருவள்ளூரில் 30 நிமிடத்தில் 108 ஆசனம் செய்து உலக சாதனை படைத்தனர்.

HIGHLIGHTS

திருவள்ளூரில் 30 நிமிடத்தில் 108 ஆசனம் செய்து உலக சாதனை
X

சான்றிதழ்களுடன் மாணவர்கள் மற்றும் நிகழ்ச்சி அமைப்பாளர்கள்.

திருவள்ளூர் அருகே, 3 வயது முதல் 70 வயது வரை உள்ளவர்கள் 30 நிமிடத்தில் 108 ஆசனம் செய்து உலக சாதனை படைத்தனர்.

திருவள்ளூர் அடுத்த ஒண்டிகுப்பத்தில் 9-வ து சர்வதேச யோகா தினத்த முன்னிட்டு ஹேப்பி யோகா ஹெல்த்கேர் அன்ட் பிட்னஸ் ஸ்டுடியோ சார்பில், உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சிக்கு யோகா ஹெல்த்கேர் அன்ட் பிட்னஸ் ஸ்டுடியோ நிறுவனர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். கீதா செந்தில்குமார் முன்னிலை வகித்தார். நோவா உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்கான உலக சாதனை முயற்சியாக 3 முதல் 70 வயது வரை உள்ளவர்கள் கலந்து கொண்டு 30 நிமிடத்தில் 108 யோகாசனத்தை செய்து சாதனை படைத்தனர்.

இதில் சிறப்பு விருந்தினர்களாக ஜெய்ஸ்ரீ கிருஷ்ணா சில்க்ஸ் நிறுவனர் மணியரசன், ரயில்வே இன்ஸ்பெக்டர் செபாஸ்டின், ஸ்ரீ தன்வந்திரி யோகா இயற்கை மருத்துவத்தின் நிறுவனர் மற்றும் பேராசிரியர் ஹேமமாலினி கலந்து கொண்டு யோகா உலக சாதனை நிகழ்ச்சியை பார்வையிட்டனர். இந்த சாதனை நோவா உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறும் என தெரிவித்தனர்.

இந்த சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

Updated On: 21 Jun 2023 4:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  2. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  3. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  4. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  5. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  7. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  8. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  9. ஈரோடு
    பவானி அருகே விபத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் உயிரிழப்பு
  10. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!