பெரியபாளையம் அருகே இளம்பெண்ணை விபசாரத்தில் ஈடுபடுத்த முயன்ற 2பேர் கைது

பெரியபாளையம் அருகே இளம்பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற 2பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
பெரியபாளையம் அருகே இளம்பெண்ணை விபசாரத்தில் ஈடுபடுத்த முயன்ற 2பேர் கைது
X

இளம்பெண்ணை விபசாரத்தில் ஈடுபடுத்த முயன்றதாக கைது செய்யப்பட்ட இருவர்.

பெரியபாளையம் பகுதியில் வேலை தேடி வந்த இளம்பெண்ணை விடுதியில் வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற இருவர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

சென்னை கொரட்டூரை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர் பேருந்து மூலம் பெரியபாளையம் பஸ் நிலையத்தில் வந்திறங்கி வேலை தேடி கொண்டிருந்தார். அப்போது பேருந்து நிலையத்தில் இருந்த இருவரிடம் இங்கு வேலை ஏதேனும் கிடைக்குமா என கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த இருவரும் வீடு ஒன்றில் வீட்டு வேலை செய்ய ஆள் வேண்டும் என கூறி அந்த இளம்பெண்ணை அழைத்து சென்றுள்ளனர். வீட்டு வேலை என கூறி அங்குள்ள தனியார் விடுதி ஒன்றிற்கு அழைத்து சென்ற கார்த்திக், மௌலி மற்றும் விடுதியில் இருந்த குகன் ஆகிய மூவரும் சேர்ந்து இளம்பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்றுள்ளனர். இளம்பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபட கட்டாயப்படுத்திய நிலையில் அதற்கு மறுத்ததால் அவரை அவதூறாக பேசி கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

பெரியபாளையம் காவல்துறையினர் வழக்கமான ரோந்து மற்றும் விடுதிகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சுதாரித்த இளம்பெண் அவர்களது பிடியில் இருந்து அங்கு வந்த பெரியபாளையம் போலீசிடம் முறையிட்டு இது தொடர்பாக புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் பேரில் பெரியபாளையம் போலீசார் பெண்கள் வன்கொடுமை வழக்கு, பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற வழக்கு, அசிங்கமாக பேசுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 7பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கார்த்திக் (36), குகன் (24) ஆகிய இருவரை கைது செய்து ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இருவரையும் புழல் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மௌலி என்பவரை தேடி வருகின்றனர்.

Updated On: 31 May 2023 12:18 PM GMT

Related News

Latest News

 1. தர்மபுரி
  புரட்டாசி சனிக்கிழமை: உழவர் சந்தையில் ரூ.18 லட்சத்திற்கு விற்பனையான ...
 2. காஞ்சிபுரம்
  பரந்தூர் விமான நிலைய உயர்மட்ட குழு வருகையை கண்டித்து சாலைமறியல்...
 3. கோவில்பட்டி
  கோவில்பட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்: ரூ. 4.99...
 4. திருப்பரங்குன்றம்
  மதுரையில் பாஜக சார்பில் ரத்த தான முகாம்
 5. கோவில்பட்டி
  கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையத்தில் ரூ. 98 லட்சம் மதிப்பில்...
 6. காஞ்சிபுரம்
  திமுக மருத்துவஅணி சார்பில் 1 லட்சம் மதிப்பில் மருத்துவ உபகரணங்கள்...
 7. தஞ்சாவூர்
  இயற்கை உரம் பயன்படுத்தி இயல்பாய் மக்காச்சோள சாகுபடி செய்யும் விவசாயி
 8. திருவண்ணாமலை
  திருவண்ணாமலையில் ஒரே நாளில் மூன்று வீடுகளில் திருடிய மர்ம நபர்கள்
 9. தூத்துக்குடி
  கூட்டுறவு வங்கி காசோலைகளை முறைகேடாக பயன்படுத்தி மோசடி: 3 பேர் கைது
 10. திருப்பத்தூர், சிவகங்கை
  சிவகங்கையில் கோ ஆப் டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்கம்