/* */

மதிப்பெண்கள் குறைந்ததால் 12ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை

திருவள்ளூர் அருகே பன்னிரண்டாம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் மன உளைச்சலில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

மதிப்பெண்கள் குறைந்ததால் 12ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை
X

பைல் படம்

திருவள்ளூர் மாவட்டம் புட்லூர் ஊராட்சி ராமாபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் ரமேஷ்.இவர் காக்களூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மகள் அனிதா (17). தனியார் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து முடித்துள்ளார்.

இந்த நிலையில் அண்மையில் நடந்து முடிந்த 12 ஆம் வகுப்பு பொதுத் பொதுத்தேர்வு தமிழகம் முழுவதும் மாணவர்கள் எழுதி முடித்துள்ளனர். இந்த நிலையில் சமீபத்தில் தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் அனிதா 600 க்கு 435 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். நன்றாக படித்து வந்த நிலையில் மதிப்பெண்கள் மிகவும் குறைவாக வந்ததால் மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து அனிதா வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையே பெற்றோர்கள் நீண்ட நேரம் ஆகியும் அனிதா வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்து ஆரைக்குள் பார்த்தபோது தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திருவள்ளூர் தாலுகா போலீசார் அனிதாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் மதிப்பெண்கள் குறைந்ததால் மன உளைச்சலில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 18 May 2023 2:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்