/* */

வெங்கல் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 2 உயிரிழப்பு

Today Accident News in Tamil - வெங்கல் அருகே இரண்டு இருசக்கர வாகனம் மோதிக்கொண்ட விபத்தில் 2 உயிரிழப்பு, 2 பேர் படுகாயம். மருத்துவமனையில் அனுமதி.

HIGHLIGHTS

வெங்கல் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 2 உயிரிழப்பு
X

விபத்தில் உயிரிழந்த ஹரி கிருஷ்ணன் மற்றும் தியாகு.

Today Accident News in Tamil - வெங்கல் அருகே 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் தனியார் கம்பெனி ஊழியர் உட்பட 2 பேர் பலி. இருசக்கர வாகனங்கள் பின்னாடி அமர்ந்து வந்த 2 பேர் படுகாயம் மருத்துவமனையில் அனுமதி.

திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அடுத்த கல்பட்டு பெருமாள் கோவில் தெரு பகுதியை சேர்ந்த மாணிக்கம் மகன் ஹரி கிருஷ்ணன் (35). இவரது மனைவி ஜெயஸ்ரீ 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். இவர் தனியார் கம்பெனியில் பணி செய்து வருகிறார். மெய்யூர் பகுதியைச் சேர்ந்த தாமோதரன் மகன் தியாகு (30) ஓட்டுநர். நேற்று இரவு ஹரி கிருஷ்ணன் பணியை முடித்துவிட்டு தன்னுடன் பணிபுரியும் சங்கர் என்பவரை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு கல்பட்டு நோக்கி புறப்பட்டார். இருசக்கர வாகனத்தை ஹரிகிருஷ்ணன் ஓட்டி வந்தார். இதேபோல் மெய்யூர்லிருந்து தியாகு இருசக்கர வாகனத்தில் பிரபாகரன் என்பவரை ஏற்றுக்கொண்டு வெங்கல் நோக்கி புறப்பட்டார்.

அப்போது சீத்தஞ்சேரி - வெங்கல் காட்டு சாலையில் வந்து கொண்டிருந்தார். வனத்துறை சோதனை சாவடி அருகே வந்து போது எதிர்பாராதவிதமாக இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் பயங்கரமான சத்தத்துடன் மோதிக் கொண்ட விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த ஹரி கிருஷ்ணன் மற்றும் தியாகு ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இரண்டு இருசக்கர வாகனங்களில் பின்புறம் அமர்ந்து வந்த பிரபாகரன் மற்றும் சங்கர் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர். தகவலறிந்த வெங்கல் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் காயமடைந்த சங்கர் மற்றும் பிரபாகரனை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 15 Jun 2022 10:08 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...