/* */

பூந்தமல்லி அருகே ரேஷன் அரிசியை கடத்திய இருவர் கைது

பூந்தமல்லி அருகே ரேஷன் அரிசியை கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

பூந்தமல்லி அருகே ரேஷன் அரிசியை கடத்திய இருவர் கைது
X

பூந்தமல்லி அருகே மினி வேனில் கடத்திவரப்பட்ட ரேஷன் அரிசியை குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு போலீசார் பறிமுதல் செய்து இந்தக் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே ரேஷன் அரிசி கடத்துவதாக வந்த ரகசிய தகவலையடுத்து திருவள்ளூர் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்தத் தகவலின் பெயரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையிலான 5.க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று மாலை பூந்தமல்லி அடுத்த கோளப்பஞ்சேரி சுங்க சாவடி அருகில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த மினி வேன் ஒன்றை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 21/2 டன் ரேஷன் அரிசி இருப்பதை கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஆவடி சிரஞ்சீவி நகரை சேர்ந்த கார்த்திக்(36).இந்த ரேஷன் அரிசியை கள்ளக்குறிச்சியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கோழி பண்ணைக்கு கடத்தி சென்றது தெரியவந்தது.

இந்த அரிசியை திருநின்றவூர் பிரகாஷ் நகர் பகுதியில் உள்ள ரேஷன் கடை விற்பனையாளர் சரண்யா(34). விற்றதாக கார்த்திக் தெரிவித்தார். இதன் பெயரில் விற்பனையாளர் சரண்யா, ஓட்டுநர் கார்த்திக் ஆகிய இருவரையும் மீது வழக்குப்பதிந்து கைது செய்து. திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை, திருவள்ளூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் போலீசார் ஒப்படைத்தனர்.

Updated On: 17 March 2023 10:10 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?