/* */

திருவள்ளூர்: ஊராட்சி தலைவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை கோரி முற்றுகை

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே ஊராட்சி தலைவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் நடந்தது.

HIGHLIGHTS

திருவள்ளூர்: ஊராட்சி தலைவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை கோரி முற்றுகை
X

காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த அத்தங்கிகாவுனுர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தங்கராஜ்.இவர் இதே ஊராட்சிகுட்பட்ட வண்டிபாட்டை எனப்படும் அரசுக்கு சொந்தமான சுமார் 12 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து நடவு நட்டு விவசாயம் செய்ய ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு தகவல் அறிந்து வந்த அத்தங்கிகாவுனுர் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி மற்றும் அவரது மகன் கவிராசன் ஆகியோர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தங்கராஜை தட்டிகேட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தங்கராஜின் அடியாட்கள் மற்றும் அவரது மகன் விஜயகுமார் ஆகியோர் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி வெங்கடாசலம் மற்றும் அவரது மகன் கவிராசன் ஆகிய இருவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இது குறித்து வெங்கல் காவல் நிலையத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி வெங்கடாச்சலம் புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வெங்கல் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்போது கோஷங்களை எழுப்பினர். பின்னர் பொதுமக்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 19 Jun 2022 2:27 AM GMT

Related News