/* */

திருவள்ளூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் முதல்வர் பிறந்தநாள் ரேக்ளா போட்டி

திருவள்ளூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற ரேக்ளா போட்டியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

HIGHLIGHTS

திருவள்ளூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் முதல்வர் பிறந்தநாள் ரேக்ளா போட்டி
X

ரேக்ளா போட்டியை பால்வளத்துறை அமைச்சர் நாசர் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, திருவள்ளூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில், வெள்ளியூர், ஆர்.ஆர்.கண்டிகையில் மாபெரும் ரேக்ளா குதிரைப் பந்தய போட்டி நடைபெற்றது. போட்டிக்கு ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஒன்றிய துணை சேர்மனும், ஒன்றிய அவைத் தலைவருமான பர்கத்துல்லா கான், ஊராட்சி துணைத் தலைவர் முரளிகிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர் வேலு ஆகியோர் வரவேற்றனர்.

ரேக்ளா போட்டியை பால்வளத் துறை அமைச்சரும், மாவட்ட செயலாளருமான ஆவடி நாசர், மாநில ஆதி திராவிடர் நலக்குழு செயலாளர் கிருஷ்ணசாமி எம்எல்ஏ ஆகியோர் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை அவர்கள் வழங்கினர். சிறிய குதிரை போட்டியில் முதல் பரிசை வெள்ளானூர் குணராஜியும், இரண்டாம் பரிசை திருவள்ளூர் முருகேசனும், மூன்றாம் பரிசை திருவள்ளூர் ரவியும், நான்காம் பரிசை ஆடியோ விஜியும் பெற்றனர்.

நடுக் குதிரை போட்டியில் முதல் பரிசை திருவள்ளூர் நந்தகுமாரும், இரண்டாம் பரிசை ஆவடி விக்கியும், மூன்றாம் பரிசை சென்னை ராதாவும், நான்காம் பரிசை திருவள்ளூர் ரவியும் பெற்றனர். பெரிய குதிரை போட்டியில் முதல் பரிசை சென்னை சரவணபவனும், இரண்டாம் பரிசை பல்லாவரம் ராஜியும், மூன்றாம் பரிசை சென்னை இக்பாலும், நான்காம் பரிசை ஒதிக்காடு கமல முதலியாரும் பெற்றனர்.

பரிசளிப்பு விழாவல், திமுக மாவட்ட துணைச் செயலாளர் ஜெயபாலன், ஒன்றியக் குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன், பொதுக்குழு உறுப்பினர் விமல்வர்ஷன், ஒன்றிய செயலாளர் தங்கம் முரளி, மாவட்ட கவுன்சிலர் தென்னவன், ரேக்ளா குதிரைகள் நல சங்க தலைவர் ரவிந்திரபாபு, ஒன்றிய நிர்வாகிகள் மனோகரன், மதுரைவீரன், பிராங்கிளின், ஈக்காடு முகம்மது ரபீக், சங்கீதா சீனிவாசன், கிளை நிர்வாகிகள் கஜேந்திரன், சுரேஷ், ஏழுமலை, வெங்கடேசன், கிருஷ்ணமூர்த்தி, முரளி உள்பட பலர் கலந்துக் கொண்டனர்.

Updated On: 28 March 2023 4:15 AM GMT

Related News

Latest News

  1. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!
  2. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  3. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  4. சோழவந்தான்
    கொண்டையம்பட்டி தில்லை சிவ காளியம்மன் கோவில் வளையல் உற்சவ திருவிழா
  5. ஈரோடு
    ஈரோட்டில் புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 3 கடைகளுக்கு...
  6. இராஜபாளையம்
    ராஜபாளையம் அருகே திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறந்து வைத்த
  7. ஈரோடு
    எடப்பாடி பழனிசாமி 70வது பிறந்தநாள்: பெருந்துறையில் சர்க்கரைப் பொங்கல்...
  8. தமிழ்நாடு
    அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கு பத்திரப்பதிவு துறை தலைவர் சுற்றறிக்கை
  9. தேனி
    வீரபாண்டி கோவில் திருவிழாவில் ஒரே நேரத்தில் 61 அக்னிசட்டி எடுத்த...
  10. இந்தியா
    ஸ்டாலின் கைது செய்யப்படுவார்: கெஜ்ரிவால் திடீர் கண்டு பிடிப்பு