/* */

திருவள்ளூர் அருகே தாமரைப்பாக்கம் போலாட்சி அம்மன் ஆலய தீமிதி திருவிழா

Pollachi Amman Temple - திருவள்ளூர் அருகே தாமரைப்பாக்கம் போலாட்சி அம்மன் ஆலய தீமிதி திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது.

HIGHLIGHTS

திருவள்ளூர் அருகே தாமரைப்பாக்கம் போலாட்சி அம்மன் ஆலய தீமிதி திருவிழா
X

Pollachi Amman Temple - திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பூந்தமல்லி அடுத்த தாமரைப்பாக்கம் கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ அருள்மிகு போலாட்சி அம்மன் ஆலய தீமிதி திருவிழாவை வெகு விமரிசையாக நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு கடந்த 31ஆம் தேதி அன்று மண்ணடியில் ஊர் கூடி கூழ் வார்த்தல் இரவு 9 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியை தொடர்ந்து கடந்த 5. ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று கிராமத்தைச் சேர்ந்த 200 பக்தர்கள் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையடுத்து நேற்று 7.ம் தேதி அன்று காலை அம்மனுக்கு பால் தயிர் சந்தனம் மஞ்சள் குங்கும அர்ச்சனை இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு வண்ண மலர்களால் அம்மனை அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பூ கரகம் புறப்பாடு அழகுபானை நிற்க வைத்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

பின்னர் 6 மணி அளவில் காப்பு கட்டி விரதம் இருந்த 200 பக்தர்கள் புனித நீராடிய இடத்திலிருந்து உற்சவர் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களை அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் ஆலயத்தின் எதிரில் அமைக்கப்பட்டிருந்த தீ குண்டத்தில் பக்தர்கள் ஒருவருக்கு ஒருவர் பின் தீ குண்டத்தில் இறங்கி தீ மிதித்து நேர்த்தி கடனை செலுத்தி அம்மனை தரிசனம் செய்து வைக்கப்பட்டனர். திருவிழாவை காண அங்கு வந்திருந்த திரளான பக்தர்களுக்கு ஆலயத்தின் சார்பில் அன்னதான பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இரவு10 மணி அளவில் அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் ஊர் பெரியவர்கள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.திருவ


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 9 Aug 2022 6:27 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இதயங்கள் என்னவோ வேறு வேறுதான்..! உன்னில் நான்; என்னில் நீ..!
  2. கோவை மாநகர்
    எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடியார் முதல்வராக வருவார் : எஸ்.பி....
  3. உலகம்
    அழகென்றால் இளமை மட்டும் இல்லை: 60 வயதில் அசத்தும் வழக்கறிஞர்
  4. சினிமா
    கருவில் கரைந்த எம்.ஜி.ஆர்., குழந்தை..!
  5. நாமக்கல்
    ப.வேலூர் அருகே வாலிபர் மர்ம மரணம்! போலீசார் தீவிர விசாரணை!
  6. லைஃப்ஸ்டைல்
    அக்காவுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள்..!
  7. நாமக்கல்
    மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மைத்துனரை தாக்கிய வாலிபர் கைது..!
  8. நாமக்கல்
    ஏ.மேட்டுப்பட்டி ஸ்ரீ ராமர் கோயிலில் உழவாரப்பணிகள் துவக்க விழா..!
  9. லைஃப்ஸ்டைல்
    வாழ்வில் வெற்றி பெற வழிகள்
  10. தேனி
    மாயாவதிக்கு பிரதமர் பதவி! பகுஜன் சமாஜ் கட்சி ஆசை!