/* */

எல்லாபுரம் அருகே புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டித்தர மக்கள் கோரிக்கை

எல்லாபுரம் அருகே புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டித்தர பொது மக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

HIGHLIGHTS

எல்லாபுரம் அருகே புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டித்தர மக்கள் கோரிக்கை
X
எல்லாபரம் அருகே ஆபத்தான நிலையில் உள்ள ஊராட்சி மன்ற கட்டிடம்.

எல்லாபுரம் அருகே ஆபத்தான ஊராட்சி மன்ற கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய காங்கிரீட் கட்டிடத்தை கட்டி தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆயலச்சேரி ஊராட்சியில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட மக்களின் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அரசு பள்ளி அருகே சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஊராட்சி மன்ற கட்டிடம் உள்ளது. இப்பகுதி மக்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளையும், வீட்டு வரி, குடிநீர் வரி, சொத்து வரி உள்ளிட்ட வரிகளை செலுத்த இந்த ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர்,

இந்த நிலையில் இந்த ஊராட்சி மன்ற கட்டிடமானது சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடம் என்பதால் தற்போது கட்டிடத்தின் உள் மேற்கூரை மிகவும் பழுதடைந்து மேற்கூரை சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்து கீழே கொட்டுவதுடன் அதில் உள்ள கம்பிகள் வெளியே தெரிந்த படி ஆபத்து விளைவிக்கும் வகையில் காட்சி அளிக்கிறது.

மேலும் அருகே அரசு பள்ளி உள்ளதால் ஓய்வு நேரங்களில் மாணவர்கள் வெளியே வந்து விளையாடிக்கொண்டிருப்பார்கள். எனவே இந்த கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடத்தை கட்டி தர வேண்டும் என்று பலமுறை கோரிக்கை வைத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டி வருகிறார்கள்.

இந்த ஊராட்சி மன்ற கட்டிடம் இதே நிலையில் தொடர்ந்தால் என்றாவது ஒரு நாள் இடிந்து விழுந்து அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கோ அல்லது வரி கட்டுவதற்காக வரும் மக்களுக்கோ அல்லது விளையாட வரும் மாணவர்களுக்கோ உயிர்ப்பலி சேதத்தை ஏற்படுத்தி விடும் என்பதில் ஐயமில்லை. ஆதலால் பெரிய அளவிலான ஆபத்து விளைவிக்கும் முன்பே இந்த பழுதடைந்த ஊராட்சி மன்ற கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

Updated On: 26 Nov 2022 6:53 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி