/* */

புதிய மின்மாற்றிகளை இயக்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி

அயலூர் ஊராட்சி மக்கள் பயன் பாட்டிற்காக புதிய மின்மாற்றிகளை சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி இயக்கி வைத்தார்

HIGHLIGHTS

புதிய மின்மாற்றிகளை இயக்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி
X

காக்களூரில் ரூ.78.50 லட்சம் மதிப்பில் சாலை பணி ஆயலூர் ஊராட்சியில் ரூ.10 லட்சம் மதிப்பில் 2 இடங்களில் புதிய மின் மாற்றிகள் ஆ.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.

காக்களூரில் ரூ.78.50 லட்சம் மதிப்பில் சாலை பணி ஆயலூர் ஊராட்சியில் ரூ.10 லட்சம் மதிப்பில் 2 இடங்களில் புதிய மின் மாற்றிகள் ஆ.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.

திருவள்ளூர் ஒன்றியம், பூந்தமல்லி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட காக்களூரில் தமிழ்நாடு முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.78.50 லட்சம் மதிப்பில் காக்களூர் காலனி பகுதியில் இருந்து அப்பாசாமி சாலை வரை புதிதாக சாலை அமைக்கும் பணி தொடக்க விழா நடைபெற்றது.

இந்த விழாவிற்கு ஒன்றிய குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன், ஒன்றிய செயலாளர் ஆர்.ஜெயசீலன், ஒன்றிய குழு துணைத் தலைவர் எம்.பர்கத்துல்லாகான், பொதுக்குழு உறுப்பினர் த.எத்திராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக மாநில ஆதிதிராவிட நலகுழுச் செயலாளரும் பூவிருந்தவல்லி சட்ட மன்ற உறுப்பினருமான ஆ.கிருஷ்ணசாமி கலந்து கொண்டு தலைமை வகித்து சாலை அமைக்கும் பணியை ஜேசிபி எந்திரம் மூலம் தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து திருவள்ளூர் ஒன்றியம், ஆயலூர் ஊராட்சியில் குறைந்த மின் அழுத்தம் காரணத்தினால் மின் உபயோகப் பொருட்கள் சரிவரை இயக்குவது இல்லை என்றும் சிரமப்பட்டு வருவதாக தாங்கள் பகுதிக்கு புதிய மின்மாற்றியை அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர். பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இரு வெவ்வேறு இடங்களில் தலா ரூ. 5 லட்சம் வீதம் ரூ.10 லட்சம் மதிப்பில் புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டு புதிய மின்மாற்றிகளை மக்கள் பயன்பாட்டிற்காக இயக்கி வைத்தார்.

இதில் பொதுகுழு உறுப்பினர் பொன்.விமல், ஒன்றிய கவுன்சிலர்கள் டி.கே.பூவண்ணன், வேதவல்லி சதீஷ், மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் டி.எம்.ராமச்சந்திரன், எஸ்.என்.குமார், எஸ்.சௌந்தர்ராஜன், அயலூர் வெங்கடேசன், லாசர், பிரபு, அப்புன்ராஜ், சிவப்பிரகாசம், சதீஷ், செந்தில்குமார், முருகன் கோவிந்தராஜ், கிறிஸ்டன், விக்கி, எட்டியப்பன், கார்த்தி, கமல், திராவிடதேவன், பாலாஜி , வெங்கடேசன், நாகேஷ், லட்சுமணன், பாஸ்கர், அரவிந்த், சாரங்கன், ஜெகதீசன், முருகேசன், துரைராஜ், ஜெயராமன், நாராயணமூர்த்தி, சந்திரசேகர், தேவகி, ஆனந்தி, கோகிலா, கௌரி மற்றும் பொதுமக்கள் மின்வாரிய அலுவலர்கள் என ஏராளமானோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



Updated On: 26 Aug 2023 5:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  3. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  5. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  6. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
  9. குமாரபாளையம்
    10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ,...
  10. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...