/* */

புதிய கட்டிடம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை சேத்துப்பாக்கம் தொடக்கப்பள்ளியில் இடிந்து விழும் நிலையில் கட்டிடம்?

திருவள்ளூர் மாவட்டம் சேத்துப்பாக்கம் ஊஒதொ பள்ளியில் இடிந்துவிழும் நிலையிலுள்ள பள்ளி கட்டிடத்தினை அகற்றிவிட்டு புதிய தார்ஸ் கட்டிடம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

புதிய கட்டிடம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை   சேத்துப்பாக்கம்  தொடக்கப்பள்ளியில்   இடிந்து விழும் நிலையில் கட்டிடம்?
X

5௦ ஆண்டுகளுக்குமுன்பு கட்டப்பட்ட  இடிந்து விழும் நிலையிலுள்ள ஓட்டுவில்லை கட்டிடம்

damaged school classroom renovation நீட்

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அருகே சேத்துப்பாக்கம் ஊராட்சியில் 2000.க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 100.க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர்.

damaged school classroom renovation

விபத்து ஏற்படும் முன் விழிப்பார்களா அதிகாரிகள்

பள்ளி வளாகதத்தில் சுமார் 50.ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சீமை ஓடு போட்ட பள்ளி கட்டிடம் ஒன்றுபுதிய கட்டிடம் ஒன்று என இரண்டு கட்டிடங்கள் உள்ளது பழைய கட்டிடத்தில் 1.முதல் 3 வகுப்புகள் வரையிலான மாணவர்கள் படித்து வந்தனர் 4. வகுப்பு மற்றும் 5 வகுப்புகள் புதிய கட்டிடத்தில் நடைபெற்று வந்த நிலையில். பழைய கட்டிடம் பழுதடைந்து ஆங்காங்கே கட்டிடத்தில் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டு மழைக் காலங்களில் மழைநீர் கசிந்தும் ஆபத்தான நிலையில் மாறியது. மேலும் மாணவர்கள் பள்ளியில் படிக்கின்ற போது சில நேரங்களில் ஓடுகள் கீழே விழும் நிலை உருவானது .

இதனால் இந்த கட்டிடத்தை பூட்டிவிட்டு எதிரே உள்ள புதிய கட்டிடத்தில் தற்போது பள்ளி இயங்கி வருகிறது 100 மாணவர்கள் படிப்பதற்கு போதிய இடம் வசதி இல்லாத காரணத்தினால் மாணவர்கள் மிகவும் சிரமம் படுகின்றனர். எனவே இந்தப் பழைய பள்ளி கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் மாணவர்களின் பெற்றோர்கள் பலமுறை சம்பந்தப்பட்ட துறையினருக்கு கோரிக்கை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பழைய கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டித் தர பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 5 Sep 2022 2:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  2. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  3. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  4. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மீன ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. தொழில்நுட்பம்
    ககன்யான் திட்டத்தின் அடுத்த கட்டம்: பாராசூட் சோதனையில் இஸ்ரோ!
  7. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: துலாம் ராசிக்கு எப்படி இருக்கும்?
  8. உலகம்
    கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்கவிளைவுகளா? அஸ்ட்ராஜெனகா விளக்கம்
  9. லைஃப்ஸ்டைல்
    வெயிலை விரட்டுங்கள்: இந்தியாவின் கோடைக்கால பழங்கள்!
  10. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டு சிறை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு