/* */

தாமரைபாக்கம் அருகே மழைநீரில் மூழ்கி நெற்பயிர்கள் சேதம்: விவசாயிகள் கவலை

தாமரைப்பாக்கம் அருகே திடீரென பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 2000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்.

HIGHLIGHTS

தாமரைபாக்கம் அருகே மழைநீரில் மூழ்கி நெற்பயிர்கள் சேதம்: விவசாயிகள் கவலை
X

தாமரைப்பாக்கம் அருகே திடீரென பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாராக நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.

தாமரைப்பாக்கம் அருகே திடீரென பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 2000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. நெல்மணிகள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை. அரசு உரிய நிவாரணம் வழங்க கோரிக்கை.

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி தாமரைப்பாக்கம் அடுத்த வெள்ளியூர் பகுதியில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு பெய்த திடீர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்து 2000.க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகிய நிலையில் நெல்மணிகள் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

தாமரைப்பாக்கம் அடுத்த வெள்ளியூர் கிராமத்தில் 100.க்கு மேற்பட்ட விவசாயிகள் 2000 க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். இந்த நிலையில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் கடந்த டிசம்பர் மாதம். கடைசியில் பெய்த கனமழையில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி இருந்தன. தண்ணீர் வடிந்த நிலையில் தற்போது கதிர் முற்றி அறுவடைக்கு தயாராக இருந்த 2000க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நெல்மணிகள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

கிராமத்தில் உள்ள விளைநிலங்களில் தண்ணீர் வெளியேற வடிகால் முறையாக இல்லாததால் நெற்பயிர்கள் அனைத்தும் சாய்ந்து நீரில் மூழ்கியுள்ளன.நெல்மணிகள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி முளைத்து விடும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஏக்கர் ஒன்றிற்கு சுமார் 25000ரூபாய் முதல் 30000ரூபாய் வரை செலவு செய்து பயிரிட்ட நிலையில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் திடீர் மழையால் பாதிப்படைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் மழையால் பாதிப்படைந்த தங்களது நெற்பயிருக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

Updated On: 5 Jan 2022 2:15 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?