/* */

தாமரைப்பாக்கம் ஊராட்சியில் நிவாரண பொருட்கள் வழங்கிய சேர்மேன் ரமேஷ்

தாமரைப்பாக்கம் ஊராட்சியில் தனியார் நிறுவனம் வழங்கிய நிவாரண பொருட்களை ஒன்றிய சேர்மேன் ரமேஷ் 1600 குடும்பங்களுக்கு வழங்கினார்.

HIGHLIGHTS

தாமரைப்பாக்கம் ஊராட்சியில் நிவாரண பொருட்கள் வழங்கிய சேர்மேன் ரமேஷ்
X

தாமரைப்பாக்கம் ஊராட்சியில் அமேசான் நிறுவனம் வழங்கிய நிவாரண பொருட்கள் ஒன்றிய சேர்மேன் ரமேஷ் பொதுமக்களுக்கு வழங்கினார். அருகில் ஊராட்சி தலைவர் கீதா துளசிராமன்.

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி தொகுதி எல்லாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட தாமரைப்பாக்கம் ஊராட்சியில் சமீபத்தில் பெய்த கனமழை காரணத்தினால் வீடுகளில் தண்ணீர் சூழ்ந்து வாழ்வாதாரம் இழந்து தவித்த1600 குடும்பங்களுக்கு அமேசான் தனியார் நிறுவனத்தின் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஊராட்சி மன்றத் தலைவர் கீதா துளசிராமன் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக எல்லாபுரம் ஒன்றிய குழு தலைவர் வடமதுரை கே. ரமேஷ், எல்லாபுரம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டு ௫ கிலோ அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கினார்.

இதில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து முக கவசம் அணிந்து பொருட்களை பெற்றுச் சென்றனர். இந்நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளர் நரசிம்மன், மற்றும் அமேசான் நிறுவனத்தின் அதிகாரிகள் ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர் முடிவில் ஊராட்சி மன்ற செயலர் நித்யா செல்வம் நன்றி கூறினார்.
Updated On: 17 Dec 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. செய்யாறு
    செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...
  2. திருவண்ணாமலை
    கார் விபத்தில் சிக்கிய அமைச்சரின் மகன்: போலீசார் விசாரணை
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் இன்னுயிர் காப்போம் திட்டம்: 6,568 பேருக்கு ரூ. 4.73 கோடி...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  8. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  9. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  10. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...