/* */

பூந்தமல்லியில் 100 பயனாளிகளுக்கு வெள்ளாடுகள்: எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி, ஆட்சியர் ஜான் வர்கீஸ் வழங்கினர்..!

MLA News -பூந்தமல்லியில் 100 பயனாளிகளுக்கு 20 லட்சம் ரூபாயில் வெள்ளாடுகளை எம்.எல்.ஏ கிருஷ்ணசாமி, திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினர்.

HIGHLIGHTS

பூந்தமல்லியில் 100 பயனாளிகளுக்கு வெள்ளாடுகள்: எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி, ஆட்சியர் ஜான் வர்கீஸ் வழங்கினர்..!
X

புதுச்சத்திரத்தில் நடைபெற்ற இலவச வெள்ளாடுகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பூவிருந்தவல்லி எம்.எல்.ஏ கிருஷ்ணசாமி, ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ்.

MLA News -புதுச்சத்திரத்தில் நடைபெற்ற இலவச வெள்ளாடுகள் வழங்கும் நிகழ்ச்சியில் பூவிருந்தவல்லி எம்.எல்.ஏ கிருஷ்ணசாமி, ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் பங்கேற்றனர். இதில் பேசிய ஆட்சியர், தமிழகத்தில் ஊரகப் பகுதியில் வசிக்கும் ஏழ்மை நிலையில் உள்ள விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோர், ஆதரவற்ற பெண்கள் மற்றும் திருநங்கைகள் ஆகியோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அறிவிக்கப்பட்டது, இலவச வெள்ளாடுகள் வழங்கும் திட்டம்.

இந்த திட்டம் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வரும் ஒரு சிறந்த திட்டம்.இந்த திட்டம் திருவள்ளுர் மாவட்டத்தை பொறுத்தவரைக்கும் 14 ஒன்றியங்களை சேர்ந்த ஒன்றியத்திற்கு தலா 100 பயனாளிகள் என்ற முறையில் 1,400 பயனாளிகளுக்கு வெள்ளாடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.அதன் படி திருவள்ளுர் மாவட்டத்தில் 1,400 பயனாளிகள் என்றிருந்த எண்ணிக்கை தற்போது 1,600 பயனாளிகளாக நம் மாவட்டத்தில் உயர்த்தி இந்த வெள்ளாடுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அரசின் கணக்குப்படி இந்த திட்டம் மூலமாக இரண்டு ஆண்டுகளில் 20 ஆடுகள் கொண்ட ஒரு பண்ணை அமையும் என்பது அரசு துறை சார்பாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதமாக அரசு வழங்கியுள்ள இந்த திட்டத்தை அனைவரும் முறையாகவும், முழுமையாகவும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து பூவிருந்தவல்லி எம்.எல்.ஏ.,கிருஷ்ணசாமி பேசுகையில், ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை காக்கும் பொருட்டு தமிழக முதல்வர் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அதே போல் பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும், ஆதரவற்ற பெண்கள், திருநங்கைகளும் தொழில் முனைவோராக வர வேண்டும் என்பதற்காக இந்த வெள்ளாடுகள் வழங்கும் திட்டத்தையும் முதல்வர் தொடங்கி வைத்ததாகவும் தெரிவித்தார்.

அதன்படி பூவிருந்தவல்லி ஒன்றியத்தில் இன்று வெள்ளாடுகள் வழங்கியது போல் தொகுதி முழுவதிலும் வெள்ளாடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதே போன்று இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிகுழுத் தலைவர் உமா மகேஸ்வரி, மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் தேசிங்கு, பூவிருந்தவல்லி ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பரமேஸ்வரி கந்தன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் ராஜேந்திரன், கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் வெங்கடரமணன், கால்நடை மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அ.தி.மு.கவினருக்கு ஆட்சியர் கடும் எச்சரிக்கை: இலவச வெள்ளாடுகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அ.தி.மு.கவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தின் அடுத்த கட்டமாக வருகிற 11-ந் தேதி அதிமுக பொதுக்குழு கூட உள்ளது. அந்த பொதுக்குழுவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடும் நிலை இருப்பதால் அனைவரும் அரசின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் மீறும் பட்சத்தில் வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொது இடங்களில் முககவசம் அணியாமல் வருபவர்கள் மீது 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் எனவும் கடுமையாக எச்சரித்தார்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 6 July 2022 11:02 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!