/* */

பழவேற்காடு பகுதி மீனவர்களுக்கு புயல் காரணமாக எச்சரிக்கை

Storm News Today -பழவேற்காடு பகுதி மீனவர்கள் புயல் காரணமாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

பழவேற்காடு பகுதி மீனவர்களுக்கு புயல் காரணமாக எச்சரிக்கை
X
பழவேற்காடு கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மீன் பிடி படகுகள்.

Storm News Today -தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வங்கக்கடலில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக 14 மாவட்டங்களில் 4 நாட்கள் கடுமையான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்து இருந்தது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறக்கூடும் என எச்சரிக்கையும் விடப்பட்டு இருந்தது. இதன் காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் புயல் மற்றும் பலத்த மழையை எதிர்கொள்ள மாவட்ட ஆட்சியர்கள் தயார் நிலையில் உள்ளனர். பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி நிறுவன அதிகாரிகள் மணல் மூட்டைகளை சேகரித்து வைத்து உள்ளனர். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படியும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல கூடாது என மீன்வளத்துறை அறிவித்து உள்ளது. பழவேற்காட்டில் 5000க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. 1000க்கும் மேற்பட்ட படகுகள் கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இலங்கை கடற்கரைக்கு அருகே தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் தமிழகம் - புதுச்சேரி கடற்கரையை நோக்கி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று நகரக்கூடும். இதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், தமிழக கடலோரப்பகுதிகள், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்களை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. இதனையடுத்து பொன்னேரி மீன்வளத்துறை அதிகாரிகள் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதன் காரணமாக மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு சென்று மீன் பிடிக்கக் செல்ல கூடாது என மீனவர் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பழவேற்காட்டில் சுமார் ஐந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. 1000க்கும் மேற்பட்ட படகுகள் கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்து மீன்பிடி வலைகளை சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 10 Nov 2022 7:25 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  5. ஈரோடு
    பவானி அருகே சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்த அரசுப் பேருந்து
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  8. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  10. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு