/* */

இறந்து கரை ஒதுங்கிய டால்பின் மீனை அடக்கம் செய்த வனத்துறையினர்

Today Thiruvallur District News in Tamil -கடற்கரையில் கரை ஒதுங்கிய டால்பினை நடுக்கடலில் விட்ட நிலையில் இன்று ஒரு டால்பின் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது

HIGHLIGHTS

இறந்து கரை ஒதுங்கிய டால்பின் மீனை அடக்கம் செய்த வனத்துறையினர்
X

பொன்னேரி அருகே பழவேற்காடு முகத்துவாரத்தில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய சிறிய டால்பினை வனத்துறையினர் கடற்கரையில் அடக்கம் செய்தனர்.

Today Thiruvallur District News in Tamil -பொன்னேரி அருகே பழவேற்காடு முகத்துவாரத்தில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய சிறிய டால்பினை வனத்துறையினர் கடற்கரையில் அடக்கம் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த பழவேற்காடு முகத்துவாரத்தில் கடல் அலையில் அடித்துக்கொண்டு இறந்த நிலையில் டால்பின் ஒன்று கரை ஒதுங்கியது. இதனை கண்ட மீனவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் சுமார் 6அடி நீளம், 100கிலோ எடை கொண்ட இறந்த நிலையில் இருந்த டால்பினை கடற்கரை ஓரத்தில் அடக்கம் செய்தனர். நேற்று கடற்கரையில் கரை ஒதுங்கிய டால்பினை நடுக்கடலில் விட்ட நிலையில் இன்று ஒரு டால்பின் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதேபோல் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு டால் பின் ஒன்று கரை ஒதுங்கி பழவேற்காடு அடுத்த கோரைகுப்பம் மீனவ கிராமம் அருகே டால்பின் ஒன்று கடல் அலையில் அடித்துக்கொண்டு கரை ஒதுங்கியது. இதனை கண்ட மீனவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மீனவர்கள் உதவியுடன், சுமார் 5அடி நீளம், 75கிலோ எடை கொண்ட டால்பினை மீட்டு படகில் ஏற்றி, நடுக்கடலில் கொண்டு சென்று விட்டனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 24 Jan 2023 5:17 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!