/* */

siruvapuri murugan temple devotees over crowd சிறுவாபுரி முருகன் கோவிலில் ஆனி மாத கடைசி செவ்வாய் :பக்தர்கள் கூட்டம்.

siruvapuri murugan temple devotees over crowd ஆனிமாத கடைசி செவ்வாயன்று சிறுவாபுரி முருகன் கோயிலில் கூட்டம் அதிகரித்ததால் போக்குவரத்துநெரிசலும் ஏற்பட்டது.

HIGHLIGHTS

siruvapuri murugan temple devotees over crowd  சிறுவாபுரி முருகன் கோவிலில் ஆனி மாத   கடைசி  செவ்வாய்  :பக்தர்கள் கூட்டம்.
X

கடைசி செவ்வாயன்று  சிறுவாபுரி முருகன் கோயிலில் சுவாமியை வழிபட திரண்ட பக்தர்கள் 

siruvapuri murugan temple devotees over crowd

சிறுவாபுரி முருகன் திருக்கோவிலில் ஆனி மாத கடைசி செவ்வாய்க்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சுமார் 3மணி பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. தொடர்ச்சியாக 6வாரங்கள் இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. அதிலும் முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை நாட்களில் சிறுவாபுரி கோவிலில் பக்தர்கள் அதிகளவில் வந்து செல்வது வழக்கம். ஆடி மாதம் பிறக்க உள்ள நிலையில் ஆனி மாதத்தின் கடைசி செவ்வாய்க்கிழமை என்பதால் சிறுவாபுரி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

siruvapuri murugan temple devotees over crowd


siruvapur murugan temple devotees over crowd

நேற்று காலை முதலே திருவள்ளூர் மாவட்டம் மட்டுமல்லாது, காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான ஏராளமான பக்தர்கள் இங்கு சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். பொது தரிசனம், 50 ரூபாய், 100 ரூபாய் கட்டண தரிசனம் என அனைத்து வரிசைகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கோவிலுக்கு வெளியே நீண்ட வரிசையில் வந்து காத்திருப்பு மண்டபம் வழியே கோவிலுக்குள் வந்து சுமார் 3மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். புதிய வீடு கட்ட வேண்டும், திருமண தடை நீங்க வேண்டும், அரசியல், ரியல் எஸ்டேட் தொழில் என பல்வேறு வேண்டுதல் நிறைவேறுவதற்காக ஆலயத்தின் பின்புறம் உள்ள வேப்பமரத்தடியில் நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தும், செங்கற்களை அடுக்கி வைத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.


சிறுவாபுரி முருகன் கோயிலில் பக்தர்கள் பிரார்த்தித்து சுவாமிக்கு நெய்தீபம் ஏற்றினர்

சிறுவாபுரி முருகன் கோவிலில் பக்தர்கள் அதிகளவில் குவிந்தனர் மேலும் சாலையின் இருபுறமுள்ள நடைபாதை வியாபாரிகள் சாலையை ஆக்கிரமிப்பு செய்து கடைகளை நடத்தி வருவதால் அவ்வழியாக செல்லும் பேருந்துகள் இரு சக்கர மற்றும் பக்தர்கள் கொண்டு வரும் வாகனங்கள் நிறுத்துவதற்கு போதிய இடம் வசதி இல்லாத காரணத்தினால் சாலைகளில்நிறுத்தி செல்லப்பட்டது இதனால் இவ்வழியாக சென்று வரும் பேருந்துகளுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

siruvapuri murugan temple devotees over crowd


நீண்ட கால பிரார்த்தனைகள் நிறைவேறும் வகையில் குழந்தைப் பேறு வேண்டி தொட்டில்கட்டி பிரார்த்திக்கும் பக்தர்கள்

அடிப்படை வசதிகள் தேவை

கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூறும்போது, பிரசித்தி பெற்ற சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு செவ்வாய்க்கிழமை நாட்களில் அதிக அளவில் பக்தர்கள் வந்து செல்வதால் போதிய அடிப்படை வசதிகள் இல்லையென்றும் வயதானவர்கள் சிறுவர்கள் மிகவும் இன்னலுக்கு ஆளாவதாகவும். முதியவர்கள் சிறுவர்கள் உள்ளிட்டவர்களுக்கு எளிதாக தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என்றும் மேலும் தாங்கள் கொண்டு வரும் வாகனங்களை நிறுத்துவதற்கு போதிய இட வசதி இல்லாத காரணத்தினால் ஆங்காங்கே நிறுத்தி வைப்பதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுவதாகவும் பக்தர்கள் நலனை கருதி அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று பக்தர்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 12 July 2023 2:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...
  3. திருவண்ணாமலை
    அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தாலே போதுமாம்
  4. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  5. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  6. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  7. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  8. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  9. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  10. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!