/* */

மழை நீர் வடிகால் அமைக்க பொன்னேரி நகர் மன்ற கூட்டத்தில் கோரிக்கை

மழை நீர் வடிகால் அமைக்க பொன்னேரி நகர் மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்து பேசினர்.

HIGHLIGHTS

மழை நீர் வடிகால் அமைக்க பொன்னேரி நகர் மன்ற கூட்டத்தில் கோரிக்கை
X

பொன்னேரி நகர்மன்ற கூட்டம் தலைவர் பரிமளா தலைமையில் நடைபெற்றது.

பொன்னேரி நகர் மன்றத்தின் சாதாரண கூட்டத்தில் மழை நீர் வடிகால் சாலைகளில் ரப்பிஸ் கொட்டுவது குறித்து விவாதம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகர் மன்றத்தின் மாதாந்திர கூட்டம் மன்றதின் கூட்டரங்கில் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் டாக்டர்.பரிமளம் விஸ்வநாதன் தலைமை தாங்கினார், துணைத் தலைவர் வழக்கறிஞர் விஜயகுமார், நகராட்சி ஆணையர் கோபிநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற கவுன்சிலர்கள் பொன்னேரி நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் குண்டும் குழியுமாக சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும், புதிய சாலை வசதி செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். கமழைக்காலங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்குவதால் மழை நீர் வடிகால் குறித்து காரசாரமாக கேள்வி எழுப்பினர்.


அப்போது சாலைகள் சீரமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது என நகர்மன்ற தலைவர் பரிமளம் விஸ்வநாதன் தெரிவித்தார். மேலும் மழைநீர் வடிகால் செல்லும் குண்டும் குழியுமான சாலைகளை ரப்பிஸ் மூலம் சமன் செய்து தர வேண்டும் என உறுப்பினர்கள் கேட்டனர், இதற்கு நகர் மன்ற தலைவர் விரைவில் சாலைகளை சீர் செய்து செய்து தருவதாக உறுதியளித்தார்.

கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் உமாபதி,பரிதா ,கவிதா, பத்மா, சாமுண்டீஸ்வரி, நல்லசிவம் ,மோகனா, உள்ளிட்ட 21 கவுன்சிலர்கள் பங்கேற்றனர். இவைகள் அனைத்தையும் விவாதித்து தீர்மானங்களாக வைத்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

Updated On: 4 July 2023 6:24 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  2. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  7. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  8. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  9. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  10. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு