/* */

அகத்தீஸ்வரர் கோயிலில் பங்குனி மாத பிரம்மோற்சவ விழா

பொன்னேரி அகத்தீஸ்வரர் கோவில் பங்குனி மாத பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது

HIGHLIGHTS

அகத்தீஸ்வரர் கோயிலில்  பங்குனி மாத பிரம்மோற்சவ விழா
X

பொன்னேரி அகத்தீஸ்வரர் கோயிலில்  நடைபெற்ற பங்குனி மாத பிரம்மோற்சவ விழா கொடியேற்ற விழா

பொன்னேரி அகத்தீஸ்வரர் கோயில் பங்குனி மாத பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இவ்விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த கும்மமுனிமங்களம் கிராமத்தில் சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்ற ஆனந்தவள்ளி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. அகத்திய மாமுனி இத்தலத்திற்கு வருகை தந்து ஈஸ்வரனை போற்றிப் பாடிய வரலாற்று சிறப்பு வாய்ந்த இக்கோயிலின் பங்குனி மாத பிரம்மோற்சவ பெருவிழா காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.

முன்னதாக விநாயக பெருமானுக்கும் அகத்தீஸ்வர பெருமானுக்கும் ஆனந்தவள்ளி தாயாருக்கும் அதிகாலை பால் தயிர் சந்தனம் இளநீர் ஜவ்வாது உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வண்ண மலர்களாலும் பட்டு உடைகளாலும் அலங்காரம் செய்து தீப தூப ஆராதனை காண்பிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து மேளதாளம் முழங்க வேதமந்திரங்கள் ஓதியபடி சிவாச்சாரியார்கள் கொடிப்பட்டத்தை கொடி மரத்தில் ஏற்றி வைத்தனர். இதையடுத்து கொடிமரத்திற்கு சிறப்பு வழிபாடு நடத்தி மகாதீபாராதணை காட்டப்பட்டது. இதனை தொடர்ந்து சிவபெருமான் நான்கு மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று எம்பெருமான் அகத்தீஸ்வரரை தரிசித்து சென்றனர் அங்கு வந்த திருடன் பக்தர்களுக்கு ஆலயத்தின் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது மிகச் சிற்காண ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.




Updated On: 29 March 2023 3:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?