/* */

சந்திர கிரகணம்: சிறுவாபுரி முருகன் கோயிலில் தரிசன நேரம் குறைப்பு..

சந்திர கிரகணம் காரணமாக நவம்பர் 8 ஆம் தேதி சிறுவாபுரி முருகன் கோயிலில் நன்பகல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

சந்திர கிரகணம்: சிறுவாபுரி முருகன் கோயிலில் தரிசன நேரம் குறைப்பு..
X

கோயில் நிர்வாகம் வைத்துள்ள அறிவிப்பு பலகை.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகேயுள்ள சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் செவ்வாய்க்கிழமை 6 வாரங்கள் தொடர்ச்சியாக நெய்தீபம் ஏற்றி கோயிலை சுற்றி வந்து வழிபட்டால் வீடு கட்டுதல், இடம் வாங்குதல், திருமண தடை, குழந்தை பாக்கியம் உள்ளிட்ட வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் அசையாத நம்பிக்கையாக இருந்து வருகிறது.

இதனால், அனைத்து செவ்வாய்க்கிழமைகளிலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், சிறுவாபுரி சுற்றியுள்ள பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, பெரியபாளையம், ஊத்துக்கோட்டை, ஆரணி உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

மேலும், இந்தக் கோயிலில் 19 ஆண்டுகளுக்குப் பிறகு ரூபாய் ஒரு கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, கடந்த ஆகஸ்ட் மாதம் 21.ஆம் தேதி இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபு முன்னிலையில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவில் சுமார் 50,000-க்கும் மேற்பட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து சென்றனர். இதன் பின்னர் 48 நாட்கள் மண்டல பூஜையும் சிறப்பாக நடைபெற்றது. மண்டல பூஜை நிறைவு நாளில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது.

இந்நிலையில், நவம்பர் 8 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை என்பதால் அன்றையதினம் பல்லாயிரக்கணக்கானோர் கோயிலுக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அன்றையதினம் சந்திர கிரகணம் என்பதால் கோயில் நண்பகல் 12 மணியுடன் நடை சாத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

இதுதொடர்பாக சிறுவாபுரி முருகன் கோயில் முன்பு கோயில் நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை விவரம் வருமாறு:

நவம்பர் 8 ஆம் தேதி சந்திர கிரகணம் என்பதால் அன்றையதினம் நண்பகல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். 12 மணிக்கு கோயிலின் நடை சாத்தப்பட்டு சந்திர கிரகணம் முடிவடைந்த பின்னர் பரிகார பூஜைகள் செய்யப்பட்டு கோயில் மூடப்படும். எனவே, நவம்பர் 8 ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு பிறகு பக்தர்கள் யாரும் சுவாமி தரிசனத்திற்கு கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்ட மாட்டார்கள் என்று கோவில் நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையில் தெரிவிக்கப்படுள்ளது.

பொதுவாக சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் உள்ளிட்ட நாட்களில் கோயில் நடை விரைந்து சாத்தப்படுவதும், அதன் பிறகு உரிய பரிகார பூஜைகள் மேற்கொள்ளப்படுவதும் வழக்கமான நடைமுறைதான் என ஆன்மிக பெரியோர்கள் கருத்து தெரிவத்துள்ளனர்.

Updated On: 7 Nov 2022 4:38 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’