/* */

ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோவில் கும்பாபிஷேக விழா

மீஞ்சூர் அடுத்த நந்தியம்பாக்கம் கொள்ளட்டி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது

HIGHLIGHTS

ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோவில் கும்பாபிஷேக விழா
X

பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோவில் கும்பாபிஷேக விழா 

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சி 4வது வார்டு பகுதியில் அமைந்துள்ள கொள்ளட்டி கிராமத்தில் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. மேலும் இக்கோவில் அமைந்திருக்கும் பகவான் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாளை வழிபடுபவர்களுக்கு வேண்டிய காரியம் நிறைவேறும் என்பதும் ஐதீகமாக உள்ளது.

நான்கு யாக கலச பூஜைகளுடன் இன்று காலை9 மணியளவில் பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது கோபுர கலசங்களுக்கும் கருடாழ்வார் ஸ்ரீதேவி பூதேவி பிரசன்ன வெங்கடேச பெருமாள் சாமி சிலைகளுக்கு புகழ்பெற்ற புங்கம்பேடு உ.வே.சுதர்சன சார்யார் சுவாமிகள் வேதங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு பின்னர் பக்தர்கள் மீது புனித நீரானது தெளிக்கப்பட்டது. பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று சாமி தரிசனம் செய்தனர் அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

விழாவில் மீஞ்சூர், அத்திப்பட்டு, நந்தியம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.இதில் சிறப்பு அழைப்பாளர்களாக அதிமுக திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் சிறுணியம் பி.பலராமன், மீஞ்சூர் ஒன்றிய பெருந்தலைவர் அத்திப்பட்டு ஜி.ரவி, பாரதிய ஜனதா கட்சியின் பொறுப்பாளர் அன்பாலையா சிவக்குமார், ஒன்றிய கவுன்சிலர் கதிரவன், நந்தியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் கலாவதி நாகராஜன், வார்டு உறுப்பினர் ரஜினி, உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை நிர்வாகிகள் சீனிவாசன் ,வேதாச்சலம், மகேஸ்வரன், மோகன்தாஸ், சங்கர், வெங்கடேசன் ,நாராயணன், எல்லுமுத்து திருமலை உள்ளிட்டவர்களும், கிராம பொதுமக்களும்,எஸ்பிசிடி சேவை மையம், மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.

Updated On: 1 July 2023 4:00 AM GMT

Related News