மின்கசிவால் திடீர் தீ விபத்து: மூன்று குடிசை வீடுகள் கருகி சாம்பல்

பொன்னேரி அருகே மின்கசிவால் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் மூன்று குடிசை வீடுகள் தீயில் கருகின.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
மின்கசிவால் திடீர் தீ விபத்து: மூன்று குடிசை வீடுகள் கருகி சாம்பல்
X

தீப்பிடித்த எரிந்த வீட்டில் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த குன்னமஞ்சேரியில் திருநங்கைகள் குடியிருக்கும் குடிசை வீடு ஒன்றில் இன்று திடீரென தீப்பற்றி மளமளவென கொழுந்து விட்டு எரிந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் தீ மளமளவென அருகில் உள்ள இரண்டு குடிசைகளுக்கும் பரவியது. இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புப் வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இரண்டு குடிசைகள் முற்றிலும் எரிந்த நிலையில் தீ பற்றி எரிந்த குடிசையில் இருந்து அருகில் உள்ள வீடுகளுக்கு தீ பரவாமல் இருக்க தண்ணீர் கொண்டு பீச்சி அடிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து வீட்டில் இருந்து கேஸ் சிலிண்டரை தீயணைப்பு வீரர்கள் அப்புறப்படுத்தி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 3குடிசை வீடுகளில் இருந்த மின்சாதன பொருட்கள், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள், புதிய இரு சக்கர வாகனம் என சுமார் 5லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் முற்றிலும் தீயில் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்து குறித்து பொன்னேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 25 Jan 2023 6:45 AM GMT

Related News

Latest News

 1. தமிழ்நாடு
  ஆதிதிராவிடர்களுக்கான மேம்பாட்டு பணிகளை தாமதமின்றி நிறைவேற்ற முதல்வர்...
 2. சினிமா
  ரிவியூ சொன்ன குழந்தை...கூலாக பதிலளித்த ஷாருக்கான்
 3. உலகம்
  அடுத்த ஆண்டு இந்தியா வர போப் பிரான்சிஸ் திட்டம்
 4. சினிமா
  நீலம் புரொடக்சன் தயாரிப்பில் புதிய படம் அறிவிப்பு
 5. இந்தியா
  பெங்களூருவில் இந்தியா எரிசக்தி வாரத்தை தொடங்கி வைத்த பிரதமர்
 6. சினிமா
  300 கோடி ரூபாய் வசூலை அள்ளிய வாரிசு: படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
 7. தமிழ்நாடு
  அதிமுக வேட்பாளருக்கான 'ஏ' , 'பி' படிவங்களில் கையெழுத்திட...
 8. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் நாளை மறுநாள் விசைத்தறி தொழிலாளர்கள் 2ம் கட்ட...
 9. தமிழ்நாடு
  நிமிர்ந்தார் எடப்பாடி- குனிந்தார் பன்னீர்- 'கை'க்கு போட்டி இரட்டை இலை
 10. டாக்டர் சார்
  சைவ உணவுகளில் நமக்கு போதுமான சத்துகள் கிடைக்கிறதா?.....படிச்சு...