/* */

பொன்னேரியில் மின்வாரிய தொழிலாளர்கள் கோரிக்கைகள் குறித்த விளக்க கூட்டம்

பொன்னேரியில் மின்வாரிய தொழிலாளர்கள் கோரிக்கைகள் குறித்த விளக்க கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

பொன்னேரியில் மின்வாரிய தொழிலாளர்கள் கோரிக்கைகள் குறித்த விளக்க கூட்டம்
X

பொன்னேரியில் மின்வாரிய தொழிலாளர்கள் கோரிக்கை விளக்க ஆயத்த கூட்டம் நடைபெற்றது.

பொன்னேரியில் மின்வாரிய தொழிலாளர்கள் கோரிக்கைகள் குறித்து விளக்க கூட்டம் நடைபெற்றது.

3ஆண்டுகளாக நிலுவையில் உள்ள ஊதிய உயர்வை உடனே வழங்க வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தல். கோரிக்கைகள் தொடர்பாக வருகிற 28ஆம் தேதி சென்னை கோட்டையை நோக்கி பேரணி செல்வதாக தொழிற்சங்கங்கள் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கோரிக்கை தொடர்பாக அனைத்து மாவட்டங்களிலும் மின்வாரிய தொழிலாளர்கள் ஆயத்த கூட்டங்களை நடத்தி போராட்டத்திற்கு தயராகி வருகிறார்கள்.

அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி துணை மின் நிலையத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி செல்வது தொடர்பாக மின்வாரிய தொழிலாளர்கள் விளக்க கூட்டம் ஒன்றை நடத்தினர். மின் வாரிய பணியாளர்களுக்கு 3ஆண்டுகளாக நிலுவையில் உள்ள ஊதிய உயர்வை உடனே வழங்கிட வேண்டும், மின் வாரியத்தில் உள்ள 56000 காலி பணியிடங்களை உடனே நிரப்பிட வேண்டும், மின்வாரிய ஊழியர்களின் சலுகைகளை பறிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட சட்டம் BP 2ஐ ரத்து செய்ய வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 28ஆம் தேதி அனைத்து தொழிலாளர்கள் ஒன்றிணைந்து கோட்டையை நோக்கி பேரணி செல்வது குறித்து விளக்க கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது. உடனடியாக தங்களது கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்றாத பட்சத்தில் திட்டமிட்டமடி பேரணி செல்வது எனவும் அப்போது முடிவு செய்யப்பட்டது.

Updated On: 19 March 2023 9:34 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?