/* */

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கிய தலைவர் அம்மு சிவகுமார்

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருநிலை ஊராட்சியில் நிவாரண பொருட்களை ஊராட்சி மன்ற தலைவர் அம்மு சிவகுமார் வழங்கினார்.

HIGHLIGHTS

மழையால் பாதிக்கப்பட்ட  மக்களுக்கு நிவாரண உதவி  வழங்கிய தலைவர் அம்மு சிவகுமார்
X

திருவள்ளூர் மாவட்டம் திருநிலை ஊராட்சியில் தலைவர் அம்மு சிவகுமார் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

திருநிலை ஊராட்சியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 700 குடும்பங்களுக்கு ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஊராட்சி மன்ற தலைவர் அம்மு சிவகுமார் நிவாரண பொருட்கள் வழங்கினார்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்றத் தொகுதி சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட திருநிலை கிராமப்பகுதியில் சுமார் 700 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

தொடர் மழையின் காரணத்தினால் வீடுகளில் வெள்ளம் சூழ்ந்து வாழ்வாதாரம் இன்றி தவித்து வரும் திருநிலை ஊராட்சிக்குட்பட்ட கொடி பாளையம், திருநிலை காலனி. கவுண்டபாளையம். திருநிலை மேடு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வந்தனர்.

இவ்வாறு தவித்த 600 குடும்பங்களுக்கு தலா 5. கிலோ அரிசி மிகவும் பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி உள்ளிட்ட பொருட்களை ஊராட்சி மன்ற தலைவர் அம்மு சிவகுமார் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று நலம் விசாரித்து பொருட்களை வழங்கினார்.

அவருடன் ஊராட்சி மன்ற துணை தலைவர் தனசேகரன், வார்டு உறுப்பினர்கள் ஆசா பிரதாப், ரேவதி ஜான்சன், பிரகதி பொன்னரசு, பூபதி, கவிதா, வெங்கடேசன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Updated On: 13 Dec 2021 3:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  2. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  3. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  4. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  5. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!
  6. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!
  7. இந்தியா
    மோக வலையில் ஏவுகணை ரகசியம்: பாகிஸ்தான் சூழ்ச்சி தோல்வி
  8. இந்தியா
    சூரிய புயல் பூமியைத் தாக்கும் போது ஏற்படும் அரோரா! லடாக் வானில்...
  9. செங்கம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பனைஓலைபாடி அரசு மேல்நிலைப்பள்ளி...
  10. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 86.5 சதவீத மாணவர்கள் தேர்ச்சி