/* */

36 ஆண்டுகளுக்கு பின், சந்தித்துக்கொண்டமுன்னாள் மாணவ, மாணவியர் நெகிழ்ச்சி

பெரியபாளையம் அருகே ஆரணியில், அரசுப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவ, மாணவியர் 36 ஆண்டுகளுக்கு பிறகு நேரில் சந்தித்து மகிழ்ந்தனர். .

HIGHLIGHTS

36 ஆண்டுகளுக்கு பின், சந்தித்துக்கொண்டமுன்னாள் மாணவ, மாணவியர் நெகிழ்ச்சி
X

ஆரணியில், 36 ஆண்டுகளுக்கு முன்பு படித்த அரசுப் பள்ளி முன்னாள் மாணவ, மாணவியர் சந்தித்த போது, குரூப் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

பெரியபாளையம் அருகே ஆரணியில் 36 ஆண்டுகளுக்கு முன்பு படித்த அரசுப் பள்ளி முன்னாள் மாணவர்கள், சந்தித்து பழைய நினைவுகளை பகிர்ந்து நெகிழ்ச்சியடைந்தனர். தங்களது வகுப்பறைகளை தேடிப் பிடித்து அமர்ந்து, தங்களது மாணவ பருவது்து கால மலரும் நினைவுகளை பகிர்ந்து உற்சாகமடைந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட. பெரியபாளையம் அடுத்த, ஆரணியில் மா.க.வி.அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில், கடந்த 1985-87ம் ஆண்டு கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் மீண்டும் சந்திக்கும் நிகழ்ச்சி தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் 36ஆண்டுகளுக்கு பிறகு தங்களது நினைவுகளை குடும்பத்தினருடன் சென்று நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். தாங்கள் கல்வி பயின்ற வகுப்பறைகளையும் தொடர்ந்து பள்ளி வளாகத்தில் நடந்த மலரும் நினைவுகளையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டு மகிழ்ந்தனர்.

தங்களது பள்ளி கால நண்பர்களை சந்தித்த மகிழ்ச்சியில் அனைவரும் செல்பி எடுத்து தங்கள் 36 ஆண்டுகளின் முந்தைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து அனைவரும் ஒன்றிணைந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இதில் மகேந்தர், டாக்டர் பாலமுருகன், மோகனசுந்தரம், நித்திய குமார், தங்கராஜ்,அமலா தீபன், வள்ளி, மலர்விழி,அனிதா, பவானி, லக்னோ லீரோ லோட்டஸ், அருணகிரி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 19 Jun 2023 5:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் தூய்மை பணியில் ஈடுபட்ட அமைச்சர்
  3. செய்யாறு
    செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...
  4. திருவண்ணாமலை
    கார் விபத்தில் சிக்கிய அமைச்சரின் மகன்: போலீசார் விசாரணை
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் இன்னுயிர் காப்போம் திட்டம்: 6,568 பேருக்கு ரூ. 4.73 கோடி...
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  10. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு