/* */

காணும் பொங்கலையொட்டி பழவேற்காட்டில் தடையை மீறி நடந்த படகு சவாரி

காணும் பொங்கலையொட்டி பழவேற்காட்டில் தடையை மீறி சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து உற்சாகம் அடைந்தனர்.

HIGHLIGHTS

காணும் பொங்கலையொட்டி பழவேற்காட்டில் தடையை மீறி நடந்த படகு சவாரி
X

காணும் பொங்கலையொட்டி பழவேற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள். உள்படம் படகு சவாரி நடந்த காட்சி.

காணும் பொங்கலை முன்னிட்டு பழவேற்காட்டில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். சிறுவர்கள், பெண்கள் என கடலில் குளித்து உற்சாகம் அடைந்தனர்.

பொங்கல் பண்டிகையின் இறுதி நாளான காணும் பொங்கல் நேற்று தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. வழிபாட்டுத் தலங்கள், உறவினர் வீடுகள், சுற்றுலா தலங்களுக்கு சென்று பொதுமக்கள் காணும் பொங்கலை கொண்டாடினர்.

அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்துள்ள பழவேற்காட்டில் காணும் பொங்கலை முன்னிட்டு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். ஆனந்தமாக கடலில் குளித்து மகிழ்ந்தும், படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர். மெரினா, பெசன்ட் நகர், எலியட்ஸ் உள்ளிட்ட சென்னை கடற்கரைகளில் தடுப்புகளை அமைத்து மக்கள் குளிப்பதற்கு தடை விதித்து சென்னை போலீசார் பல்வேறு கெடுபிடிகள் காட்டி வருவதால் பழவேற்காடு கடற்கரைக்கு திருவள்ளூர் மாவட்டம் மட்டுமல்லாது சென்னையில் இருந்தும் ஏராளமானோர் படையெடுத்தனர்.

சிறுவர்கள், பெண்கள், குழந்தைகள், ஆண்கள் என வயது வித்தியாசமின்றி அனைவரும் கடலில் ஆனந்த குளியலிட்டு உற்சாகத்தில் திளைத்தனர். கடல் மணற்பரப்பில் உற்சாகமாக ஓடி ஆடி விளையாடி அருகே உள்ள கலங்கரை விளக்கத்தை பார்த்து சிறுவர்கள் மகிழ்ந்தனர். கடலில் துள்ளி குதித்து விளையாடியும், செல்பி எடுத்தும், குழந்தைகள் மணலில் வீடு கட்டியும் குதூகலம் அடைந்தனர். பழவேற்காட்டில் சுற்றுலா பயணிகள் வருகையை முன்னிட்டு 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கடலில் இரு படகுகளில் போலீசார் கண்கானிப்பு பணியில் ஈடுபட்டனர். பொதுமக்கள் கடலில் ஆனந்த குளியல் போட்ட நிலையில் அசம்பாவித சம்பவங்கள் நேர்ந்தால் உடனடியாக அவர்களை மீட்பதற்காக இரு படகுகளில் நீச்சல் தெரிந்த தன்னார்வர்களுடன் போலீசார் கண்கானிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தீயணைப்பு வீரர்களும் ரோந்து பணியினை மேற்கொண்டனர்.

இது ஒரு புறம் இருக்க பழவேற்காடு ஏரியில் தடையை மீறி படகு சவாரி செய்தும் சுற்றுலாப் பயணிகள் காணும் பொங்கலை கொண்டாடினர். கடந்த 2012 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடுவதற்காக பழவேற்காடு வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 22 பேர் படகு சவாரி சென்று முகத்துவாரத்தில் உயிரிழந்ததால் பழவேற்காடு ஏரியில் கடந்த 10 ஆண்டுகளாக படகு சவாரிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவ்வப்போது மறைமுகமாக படகு சவாரி நடைபெற்று வந்தாலும் புத்தாண்டு, காணும் பொங்கல் உள்ளிட்ட முக்கிய திருவிழா போன்ற நாட்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பழவேற்காட்டிற்கு வருவார்கள் என்பதால் தடை செய்யப்பட்ட படகு சவாரி செல்லாமல் இருப்பதை காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவார்கள்.

இந்த ஆண்டும் காவல்துறையினர் ஆங்காங்கே பேனர்கள் வைத்து படகு சவாரி தடை செய்யப்பட்டுள்ளது என வைத்திருந்தாலும், அதனையும் மீறி பழவேற்காட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பழவேற்காடு மீன் இறங்கு தளம் அருகில் இருந்து படகில் ஏறி பழவேற்காடு ஏரியை ரசித்தவாறு முகத்துவாரம் வரை சென்று வருகின்றனர். காணும் பொங்கலை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் ஆனந்தமாக கடலில் குளித்ததும், படகு சவாரி செய்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On: 18 Jan 2023 8:51 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!