/* */

அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் புதிய நியாய விலை கடை கட்டப்படுமா?

பெரியபாளையம் அருகே பழுதடைந்த நியாய விலை கடையை அகற்றி புதியதாக கட்டித்தர கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் புதிய நியாய விலை கடை கட்டப்படுமா?
X

பழுதடைந்த நியாய விலைக்கடை.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம். அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் சுமார் 3000.க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த நிலையில் ஊராட்சி மன்ற அலுவலகம் வளாகத்தில் கிராம நிர்வாக அலுவலகம், கிராமப்புற நூலக கட்டிடம், அரசு தொடக்கப்பள்ளி, அங்கன்வாடி மையம், இ சேவை மையம் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. இங்குள்ள தொடக்கப்பள்ளியில் சுமார் 50.க்கும் மேற்பட்ட மாணவர்கள் அங்கன்வாடி மையத்தில் சுமார் 15.க்கும் மேற்பட்ட மைலர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

இதனை எடுத்து இதே வளாகத்தில் அமைந்துள்ள நியாயவிலைக் கடை ஆனது கட்டி சுமார் 30 ஆண்டுகள் ஆகிறது. இந்த நேர விளக்கடையில் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 200.க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் இந்த நிகழ்வுகளை கடைக்கு வந்து தாங்களுக்கு அரசு வழங்கும் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சக்கரை, மண்ணெண்ணெய் உள்ளிட்ட அத்தவசு பொருட்களை வாங்கி செல்வார் பழைய கட்டிடம் என்பதால் கட்டிடம் முழுவதும் மிகவும் பழுதடைந்து மேற்கூரை சிமெண்ட் காங்கிரட்டுகள் பெயர்ந்து அதில் உள்ள கம்பிகள் வெளியே தெரிந்த படி மிகவும் ஆபத்தாக மாறி உள்ளது.

மேலும் மழைக்காலங்களில் அரசு ஏழை மக்களுக்காக வழங்கும் மேற்கொண்ட பொருட்களானது மழை நீரில் நினைந்து வீணாகிறது. இதனால் இந்த கட்டிடத்தை தற்காலிகமாக இ சேவை மையத்தில் இயங்கி வருகிறது. இரண்டு நிர்வாகம் ஒரே கட்டிடத்தில் இயங்குவதால் குடும்ப அட்டதாரர்கள் சில நேரங்களில் பொருட்களை வாங்க முடியாமல் திரும்பி செல்லும் நிலையும் உருவாகியுள்ளது.

சுமார் மூன்று வருடத்திற்கு முன்பு மூடப்பட்ட இந்த பழைய கட்டிடத்தை அகற்றி புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என்று ஊராட்சி மன்ற நிர்வாகத்திடமும், சம்பந்தப்பட்ட துறையிடும் கோரிக்கை வைத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

மேலும் மாணவர்கள் இந்த கட்டிடத்தை கடந்து தான் பள்ளிக்கு மற்றும் அங்கன்வாடி மையத்திற்கு செல்ல வேண்டும் மிகவும் ஆபத்து நிறைந்த இந்த கட்டிடம் அருகே ஓய்வு நேரங்களில் மாணவர்கள் விளையாடு கொண்டிருப்பார்கள். ஆபத்து விளைவிக்கும் முன்பு மாணவர்களின் நலனை கருதி இந்த பொழுதடைந்த நியாய விலை கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 5 Aug 2023 5:45 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    DMK-வின் மூன்றாண்டு ஆட்சி எல்லா பக்கமும் கள்ளச்சாராயம் கஞ்சா தான்...
  2. லைஃப்ஸ்டைல்
    தங்கை திருமண நாள் வாழ்த்துக்கள்: மனதைத் தொடும் வாழ்த்துச் செய்திகள்
  3. லைஃப்ஸ்டைல்
    மூன்று முடிச்சால் இரண்டு மனங்கள் ஒரு மனதாகும் திருமணம்..!...
  4. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்களின் வகைகளும் மேற்கோள்களும்
  5. வீடியோ
    சிறை கண்காணிப்பாளர் தான் என் கையை உடைத்தார்- SavukkuShankar !...
  6. லைஃப்ஸ்டைல்
    அம்மாவின் பிறந்தநாளில் அன்பின் அலைகள்!
  7. சேலம்
    மேட்டூர் அணை நீர்மட்டம் 50.78 அடியாக சரிவு..!
  8. வீடியோ
    🔴LIVE : சிறை தான் உனக்கு சமாதி என காவல் துறை மிரட்டல் சவுக்கு சங்கர்...
  9. கோவை மாநகர்
    சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார்: சவுக்கு...
  10. தேனி
    தேனியில் குப்பை சேகரிக்கும் பணி: இந்து எழுச்சி முன்னணி அதிருப்தி