/* */

கும்மிடிப்பூண்டியில் நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி நடவடிக்கை

Removal Of Encroachment -கும்மிடிப்பூண்டியில் நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

கும்மிடிப்பூண்டியில் நீர் நிலை ஆக்கிரமிப்புகளை   அகற்றி நடவடிக்கை
X

கும்மிடிப்பூண்டியில் நீர் நிலைகளில் செய்யப்பட்டு இருந்த ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினர்.

Removal Of Encroachment -கும்மிடிப்பூண்டி அருகே தேர்வழி ஊராட்சியில் ஆக்கிரமிப்பில் இருந்த 20 கோடி ரூபாய் மதிப்பிலான 47 ஏக்கர் நீர்நிலை புறம்போக்கு நிலங்களை வட்டாட்சியர் கண்ணன் தலைமையிலான வருவாய்த் துறையினர் மீட்டனர்.

தமிழகத்தில் குளம் மற்றும் நீர் நிலை புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தல் அந்த ஆக்கிரமிப்பாளர்களை அகற்றி சம்பந்தப்பட்ட நிலத்தை மீட்கவேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இந்த உத்தரவின் அடிப்படையில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே தேர்வழி ஊராட்சியில் சுமார் 250 ஏக்கர் நீர்நிலை மற்றும் அரசு புறம்போக்கு நிலங்கள் உள்ளது. இதில் சுமார் 58 ஏக்கர் பரப்பளவு கொண்ட நீர்நிலை புறம்போக்கு மற்றும் மேய்ச்சல் நில ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இவர்களுக்கு எதிராக அரசு நிலங்களை ஆக்கிரமித்து அனுபவித்து வரும் எதிர் தரப்பினர் ஊராட்சியில் உள்ள 250 ஏக்கர் நீர்நிலை மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களை மீட்க வேண்டும் என அடுத்த சில தினங்களில் வட்டார் வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக நடைபெற்ற முற்றுகை ஆர்ப்பாட்டத்தின் அடிப்படையில் 58 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலங்களை மீட்குமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.

அதன் அடிப்படையில் இன்று வட்டாட்சியர் கண்ணன் தலைமையிலான வருவாய்த்துறையினர் ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களில் அரசுக்கு சொந்தமான நிலம் என எச்சரிக்கை பலகை வைக்க முற்பட்டனர். அப்போது ஒரு தரப்பினர் வட்டாட்சியர் கண்ணனை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அவர்களுடன் பேசிய வட்டாட்சியர் கண்ணன் முதல் கட்டமாக நீர்நிலை ஆக்கரிப்புகள் மீட்கப்படுவதாகவும் தொடர்ந்து ஆக்கிரமிப்பில் உள்ள அரசு நிலங்கள் அனைத்தும் மீட்கப்படும் எனவும் வாக்குறுதி அளித்தார். தொடர்ந்து வட்டாட்சியர் கண்ணன் தலைமையில் பி.டி.ஓ வாசுதேவன் ஊராட்சி மன்ற தலைவர் கிரிஜா குமார் முன்னிலையில் 20 கோடி ரூபாய் மதிப்பிலான 47 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலங்களில் எச்சரிக்கை பேனர்கள் வைத்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

தமிழகத்தில் இது போன்று அரசு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ள அனைத்து பகுதிகளும் கண்டறிந்து அரசு நிலங்களை மீட்டெடுத்து ஆடு மாடுகள் மேய்ச்சலுக்கு சொந்த வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு வீடு கட்ட உள்ளிட்டவருக்கு பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் என்று பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். எனவே அரசு கவனம் செலுத்தி இதுபோன்ற அரசு நிலங்களை ஆக்கிரமித்து இருப்பவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து நிலங்களை மீட்டெடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 12 Oct 2022 9:53 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?