/* */

புதிய ஊராட்சி மன்றக் கட்டிடம் கட்டித் தர கிராம மக்கள் கோரிக்கை

பழைய ஊராட்சி மன்றக் கட்டிடத்தை அகற்றிவிட்டு, புதிய கட்டிடம் கட்டித் தர கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

புதிய ஊராட்சி மன்றக் கட்டிடம் கட்டித் தர கிராம மக்கள் கோரிக்கை
X

பழுதடைந்த நிலையில், காணப்படும் ஊராட்சி மன்ற கட்டிடம்.

நான்காண்டுகளாக பழுதடைந்து மூடப்பட்ட எனம்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை அகற்றி, புதிய கட்டிடம் கட்டித் தர கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம். எனம்பாக்கம் ஊராட்சியில் சுமார் 3000.க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சி மக்கள் வீட்டு வரி, குடி தண்ணீர் வரி, சொத்து வரி பல்வேறு வரிகளை கட்டவும், ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வந்து பகுதியில் உள்ள குறைகளை எடுத்து கூறி செல்வார்கள்.

இந்நிலையில், இந்த ஊராட்சி மன்ற கட்டிடமானது சுமார்40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடமாகும் தற்போது கட்டிடம் பழுதடைந்து கட்டிடத்தில் விரிசல்கள் ஏற்பட்டும் மேற்கூரை சிமெண்ட் கான்கிரீட் பூச்சுகள் உதிர்ந்து மழைக்காலங்களில் மழைநீர் மேற்கூறையில் தேங்கி நின்று விரிசல்கள் மூலம் உள்ளே வருகிறது. இதனால் ஊராட்சி முக்கிய கோப்புகள் நனைந்து வீணாவதோடு மிகவும் ஆபத்தான நிலையில் கட்டிடம் மாரிய காரணத்தினால் கட்டிடத்தை ஊராட்சி நிர்வாகம் காலி செய்து அருகாமையில் உள்ள இ சேவை மைய கட்டிடத்தில் தற்போது இயங்கி வருகிறது.

இதனால் கட்டிடம் சுற்றிலும் அடர்ந்த செடி, கொடி, முட்பொதர்கள் வளர்ந்து விஷப் பாம்பு பூச்சிகளுக்கு இருப்பிடமாக மாறியதோடு இரவு நேரங்களில் சமூக விரோத செயல்களும் நடைபெற்று வருவதாக பகுதி மக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். எனவே இந்த பழுதடைந்த ஊராட்சி மன்ற கட்டிடத்தை அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என்று எனம்பாக்கம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 21 April 2023 1:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  2. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  3. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  4. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...
  5. வீடியோ
    Captain Vijayakanth-க்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது !#captain...
  6. லைஃப்ஸ்டைல்
    கண்முன்னே காணும் கடவுள், 'அம்மா'..!
  7. வீடியோ
    தாமரைக்கும் வாக்களிக்கும் மழலை ! #modi #pmmodi #bjp...
  8. வீடியோ
    INDI Alliance-யை படுகுழிக்கு தள்ள Modi உபயோகித்த அந்த வார்த்தை 😳 |...
  9. லைஃப்ஸ்டைல்
    இசையின் அசைவு நடனம்..!
  10. வீடியோ
    🔴LIVE : சாம் பிட்ரோடா விவகாரம் பொங்கி எழுந்த நாராயணன் திருப்பதி ||...