/* */

தோட்டக்கலை துறை சார்பில் வீட்டு தோட்டம் அமைத்தல் குறித்த பயிற்சி முகாம்

பாகல் மேடு ஊராட்சியில் தோட்டக்கலை துறை சார்பில் வீட்டு தோட்டம் அமைத்தல் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

தோட்டக்கலை துறை சார்பில் வீட்டு தோட்டம் அமைத்தல் குறித்த பயிற்சி முகாம்
X

பாகல்மேடு ஊராட்சியில் பெண்களுக்கு வீட்டுத்தோட்டம் அமைப்பது பற்றி தோட்டக்கலைத்துறை சார்பில் பயிற்சி முகாம் நடந்தது.

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பாகல்மேடு ஊராட்சியில் சென்னை சமூக சேவை சங்கம் மற்றும் தமிழக அரசின் தோட்டக்கலை துறை மலை பயிர் துறை இணைந்து வீட்டு தோட்டம் அமைத்தல் குறித்த பயிற்சியும் அதன் மூலம் பெண்களின் வாழ்வுரிமை முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு முகாம் சென்னை சமூக சேவை சங்கத்தின் இயக்குனர் ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக ஐ.ஏ.எஸ். அதிகாரி பிருந்தாதேவி வீட்டு தோட்டம் அமைத்தல் குறித்தும் பெண்களின் வாழ்வில் உண்மையின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துவைத்தார். நிகழ்ச்சியில் பங்கேற்ற நுண்ணுயிரியல் சுற்றுச்சூழல் விஞ்ஞானி முனைவர் சுல்தான் அகமது இஸ்மாயில் வீட்டுத் தோட்டம் அமைப்பதன் சிறப்பம்சங்கள் குறித்தும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் அவசியம் குறித்தும் இயற்கை உரங்களை பயன்படுத்துவதன் மூலம் சத்தான காய்கறிகளை நாம் விளைவிக்க முடியும் என்றும், எடுத்துக் கூறினார்

இதன் மூலம் அனைவரும் சுகாதாரமான நல்ல ஆரோக்கியமான காய்கறிகள் பழங்கள் வரமுடியும் என்றார்.மேலும் தமிழக அரசு தோட்டக்கலைத்துறை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் பயன்பாடுகள் அதில் உள்ள முக்கிய அம்சங்கள் அதில் வழங்கப்படும் மானியங்கள் குறித்த அறிக்கையை தோட்டக்கலைத் துறையினர் எடுத்துரைத்தனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற 250 பேருக்கு நாவல் கொய்யா நெல்லி பூக்கள் உள்ளிட்ட மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இதில் முனைவர் ஜான் ஆரோக்கியராஜ், பாகல்மேடு ஊராட்சி மன்ற தலைவர் தேவகி தங்க பிரகாசம்,தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் ஜெபக்குமாரிஆனீஸ்.எஸ் பாரதி கலா, ஊராட்சி செயலர் உமாபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பாக்கியவதி நன்றி கூறினார்.

Updated On: 15 July 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  2. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  4. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  5. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  7. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  8. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  9. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  10. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!