/* */

சீரடி சாய்பாபா 104வது ஜீவசமாதி அடைந்ததை முன்னிட்டு திருவிளக்கு பூஜை

பெரிய பாளையம் அருகே சீரடி சாய்பாபா 104வது ஜீவசமாதி அடைந்ததை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டது.

HIGHLIGHTS

சீரடி சாய்பாபா 104வது ஜீவசமாதி அடைந்ததை முன்னிட்டு திருவிளக்கு பூஜை
X

பெரியாபளையம் அருகே சீரடி சாய்பாபா கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.

பெரியபாளையம் அருகே ராளாபாடி சீரடி சாய்பாபா கோவிலில் விஜயதசமி மற்றும் சாய்பாபாவின் 104 ஆவது ஜீவசமாதி அடைந்த நாளை முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் பெண்கள் திருவிளக்கு பூஜை செய்து வழிபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் ஆரணி இடையே உள்ள ராளாபாடி கிராமத்தில் அமைந்துள்ளது சீரடி சாய்பாபா திருக்கோவில். இக்கோவிலில் விஜயதசமி மற்றும் சாய்பாபாவின் 104ஆவது ஜீவசமாதி அடைந்த நாளை முன்னிட்டு காலை 6:00 மணி அளவில் ஆரத்தி நடைபெற்றது. தொடர்ந்து6.45 மணி அளவில் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் கைகளால் பாலாபிஷேகம் செய்தனர். நிகழ்ச்சியை தொடர்ந்து காலை 11.மணி அளவில் மூலவர் பாபாவிற்கு பக்தர்கள் புஷ்பாபிஷேகம் செய்தனர். இதனைத் தொடர்ந்து ஆலய வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பூஜையில் விக்னேஸ்வர பூஜை, சாய்பாபாவின் பரிபூரண அருள் வேண்டி மகா சங்கல்பம், கணபதி ஹோமம்,லட்சுமி ஹோமம்,தன்வந்திரி ஹோமம்,சுதர்சன ஹோமம்,சாய்பாபாவின் மூல மந்திர ஹோமம், ஆயுள் ஹோமம் உள்ளிட்ட ஹோமங்கள் நடைபெற்றது. இதனையடுத்து பாபாவிற்கு பால், சந்தனம், தயிர், இளநீர், ஜவ்வாது, உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. வண்ண மலர்களாலும் திரு ஆபரணங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு பின்னர் 12 மணி அளவில் பிற்பகல் ஆரத்தி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பாபாவின் பஜனை பாடல்கள் பாடினர்.

பின்னர் அங்கு வந்திருந்த திரளான பக்தர்களுக்கு ஆலயத்தின் சார்பில் அன்னதான பிரசாதங்கள் வழங்கப்பட்டது.மாலை 7 மணி அளவில் ஆலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பூஜையில் 104 பெண்கள் கலந்துகொண்டு கைகளில் திருவிளக்குகளை ஏந்தி கோவிலை சுற்றி வலம் வந்து. ஆலயத்தில் திருவிளக்குகளை வைத்து பாபாவை வழிபட்டனர். பின்னர் கோவிலுக்கு வந்திருந்த சிறுவர்களுக்கு ஆலய நிர்வாகி உதயகுமார் தலைமையில் பேனா, பென்சில்,நோட்டுபுத்தகம், உள்ளிட்ட எழுது பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ சிவ சாயி சேவா அறக்கட்டளையினர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

Updated On: 6 Oct 2022 9:30 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?