/* */

திருவள்ளூர் மாவட்ட தி.மு.க.வினருடன் ஸ்டாலின் காணொலி மூலம் ஆலோசனை

திருவள்ளூர் மாவட்ட தி.மு.க.வினருடன் ஸ்டாலின் காணொலி மூலம் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

HIGHLIGHTS

திருவள்ளூர் மாவட்ட தி.மு.க.வினருடன் ஸ்டாலின் காணொலி மூலம் ஆலோசனை
X
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தி.மு.க.வினருடன் முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.

திராவிட மாடல்ஆட்சியின் சாதனைகளை பொதுமக்களிடம் சேருங்கள். வாக்காளர்களாக அவர்களை மாற்றுங்கள் என்றும் தி.மு.க.தேர்தலுக்கான கட்சியாக இல்லாமல் தொடர்ந்து மக்கள் பணிக்காக சிறப்பாக செயல்படவேண்டும் என தான் ஆசைப்படுவதாகவும் பாராளுமன்ற தேர்தலில் 40 இடங்களிலும் வெற்றிபெறுவோம் என்றும் தி.மு.க. தலைவர் மு. க. ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் பாக முகவர்கள் மற்றும் மாவட்ட கழக செயலாளர்களிடம் தி மு க தலைவர் ஸ்டாலின் கானொளி வாயிலாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தி வருகிறார்.

அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி பெரியபாளையம் அருகே உள்ள ஆத்துபாக்கம் பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் கிழக்கு மாவட்ட தி. மு. க. செயலாளரும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜே. கோவிந்தராஜன் தலைமையில் கானொளி நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலின் போது தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு. க. ஸ்டாலின் பேசியதாவது:-

எனது கட்டளையை ஏற்று வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40க்கும் 40 வெற்றி பெற 234 சட்டமன்ற தொகுதிகளிலும் பூத் கமிட்டி முகவர்கள் 68ஆயிரத்து 36 பேர் நியமிக்கப்டுள்ளனர். தி.மு.க. தேர்தலுக்கான கட்சியாக இல்லாமல் தொடர்ந்து பூத்கமிட்டி செயல்பட வேண்டும்.இதுவே எனது ஆசை. திராவிடமாடல் ஆட்சியின் சாதனைகளை பொதுமக்களிடம் கொண்டுபோய் சேருங்கள் வாக்காளர்களாக அவர்களை மாற்றுங்கள். தேர்தலின் போது அவர்களை வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யவேண்டும். வாக்கு குறைந்தால் முகவர்களை நான் கேட்பேன். கூடுதலாக கிடைத்தால் முகவர்களை பாராட்டுவேன்.வாக்காளர் சிறப்பு முகாம்களில் முழுமையாக செயல்பட வேண்டும் வாக்காளர் பட்டியலில் முழுமையாக சோதனை செய்யவேண்டும். எந்த தேர்தலுக்கும் இது உதவியாகஇருக்கும்.

10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் சுரண்டியே நிதி நிலைமையை சீரழித்தார்கள். நாம் ஆட்சிக்கு வந்ததும் கொரானா கேடுகளை சந்தித்தாலும் தொடர்ந்து மக்களுக்கு நல்ல திராவிட மாடல் ஆட்சி நடக்கிறது சிறப்பான தி மு க அரசின் மக்களாட்சியை அனைவரிடமும் கொண்டு செல்லும் கடமை கட்சியினருக்கு உள்ளது. வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.அதற்காக இப்போதே ஒவ்வொரு தொண்டனும் உழைக்க தொடங்கவேண்டும்.

இவ்வாறு மு.க. ஸ்டாலின் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் மாநில தகவல் தொழில் நுட்ப அணி சி. எஸ். சேகர், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி, ஒன்றிய செயலாளர்கள் எல்லாபுரம் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பி.ஜே.மூர்த்தி, எல்லாபுரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சத்திய வேலு, ஒன்றிய செயலாளர்கள் மணிபாலன், கி.வே. ஆனந்தகுமார்,பரிமளம், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வழக்கறிஞர் தேவேந்திரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் உதயசூரியன், மாவட்ட கவுன்சிலர் சித்ரா முனுசாமி, மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் சீனிவாசன், ஊத்துக்கோட்டை நகர செயலாளர் அபிராமி, ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 14 Nov 2022 7:38 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம்...
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க அமைச்சர்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீசும் அனல் காற்று: பொதுமக்கள் தவிப்பு
  5. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  6. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  7. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  8. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  9. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  10. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...